வாடகைக்கு உள்ளவர்.. இந்த தவறை செய்யாதீங்க.. வீட்டு ஓனர்களுக்கு சாதகமாக.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
சென்னை: ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டை ஏதாவது ஒரு உண்மையான காரணத்திற்காக பயன்படுத்த நினைத்தால் அதை தடுக்க வாடகைதாரருக்கு உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டு உள்ளது. வீட்டு உரிமையாளர் தனது உண்மையான தேவையை நிரூபித்தால், அதை தடுக்க வாடகைதாரருக்கு அல்லது குத்தகைதாரருக்கு உரிமை இல்லை என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது.
நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வு, மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டை விசாரித்தது. மும்பை காமதிபுரா, நாக்வாடாவில் உள்ள ஒரு வணிகச் சொத்து தொடர்பான மோதலே இந்த வழக்கின் பின்னணி.

வழக்கு பின்னணி
காமதிபுரா வணிக வளாகத்தில் கட்டிடம் ஒன்றை வாங்கி இருந்த உரிமையாளர் தனது மருமகளின் தொழில் தேவைக்காக அங்கே வாடகைக்கு இருந்தவரை காலி செய்ய சொன்னார். ஆனால் அவர் காலி செய்யவில்லை. இதையடுத்து அவரை காலி செய்யக் கோரி மும்பை கீழமை நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில்.. வாடகைக்கு இருந்தவரை காலி செய்ய சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து வாடகைக்கு இருந்தவர் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார். உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ரத்து செய்து.. வாடகைக்கு இருந்தவர் அங்கேயே இருக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டியதாயிற்று.
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
இந்த வழக்கில், கட்டிடத்தின் இரண்டாவது, மூன்றாவது தளங்களில் உரிமையாளருக்குக் காலியிடங்கள் இருப்பதாகவும், அவற்றைக் கடைக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம் என்றும் வாடகைதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதை உரிமையாளர் தரப்பு வழக்கறிஞர் கடுமையாக மறுத்தார்.
இதில்தான் ஒரு கடையின் அல்லது வீட்டின் உரிமையாளர் தனது வீட்டை ஏதாவது ஒரு உண்மையான காரணத்திற்காக பயன்படுத்த நினைத்தால் அதை தடுக்க வாடகைதாரருக்கு உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டு உள்ளது. வீட்டு உரிமையாளர் தனது உண்மையான தேவையை நிரூபித்தால், அதை தடுக்க வாடகைதாரருக்கு அல்லது குத்தகைதாரருக்கு உரிமை இல்லை என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது.
உச்ச நீதிமன்றம் மும்பை உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறையை விமர்சித்தது. தமது மறுஆய்வு அதிகார வரம்பை மீறி, ஆதாரங்களை நுணுக்கமாக ஆராய மறுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியது. இரு நீதிமன்றங்கள் பதிவு செய்த கண்டுபிடிப்புகளை ரத்து செய்யும்போது, உயர் நீதிமன்றம் ஆவணங்களையும் ஆதாரங்களையும் மிக நுணுக்கமாக ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.
கீழ் நீதிமன்ற உத்தரவுகள் சட்டவிரோதமாகவோ அல்லது அதிகாரமற்றதாகவோ இருந்தால் மட்டுமே அதை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், மேல் தளங்கள் குடியிருப்புக்கும், தரை தள வளாகம் வணிகப் பயன்பாட்டிற்கும் ஏற்றவை எனவும் குறிப்பிட்டது.
வாடகைதாரரின் மாற்றுப் பரிந்துரையை நிராகரித்த நீதிமன்றம், "மாற்று இடத்தை பரிந்துரை செய்ய வாடகைக்கு இருப்பவருக்கு உரிமை கிடையாது. அது ஓனரின் உரிமை" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
உரிமையாளருக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், சுமார் 50 ஆண்டுகளாகக் குத்தகைதாரர் வசித்ததை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டது. அதனால், 2026 ஜூன் 30-ஆம் தேதி வரை வளாகத்தை காலி செய்ய அவருக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டு, சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
நிபந்தனைகளில், ஒரு மாதத்திற்குள் அனைத்து வாடகை நிலுவைகளைச் செலுத்துதல்; மாதாந்திர வாடகையைத் தவறாமல் தொடர்தல்; மற்றும் மூன்று வாரங்களுக்குள் மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க மாட்டேன் என உறுதியளித்தல் ஆகியவை அடங்கும். இந்த நிபந்தனைகள் பின்பற்றப்படாவிட்டால், உரிமையாளர் வெளியேற்று ஆணையை உடனடியாக அமல்படுத்தலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications