லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிபதி! சண்முகத்துக்கு 10 லட்சம் ஃபைன்! அதிமுகவுக்கு அடி.. ஆர்எஸ் பாரதி சுளீர்
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடையில்லை என அதிரடியாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதிமுக எம்பி சிவி சண்முகத்துக்கு 10 லட்சம் அபராதம் விதித்தது. இந்த நிலையில் அதிமுகவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது எனவும், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கே அதிமுக துரோகம் செய்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார் திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக எம்பி சிவி சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுத் திட்டங்களின் பெயர்களில் வாழும் ஆளுமைகளின் பெயர்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கூறி இடைக்கால தடை விதித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம்
அப்போது திமுக தரப்பில், வில்சன் மற்றும் முகுல் ரோஹ்தகி ஆகியோர் பல்வேறு வாதங்களை முன் வைத்தனர். அதிமுக தரப்பிலும் பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இறுதியாக இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடையில்லை. அரசியல் மோதலை தீர்த்துக் கொள்வதற்கு நீதிமன்றத்தை மேடையாக பயன்படுத்தக் கூடாது. அரசியல் பிரச்சனையை தேர்தல் களத்தில் தான் பேசிக் கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறோம். அரசியல் சண்டைக்கு இதுதான் இடமா? குறிப்பிட்ட ஒரு ஆட்சியின் திட்டத்தை எதிர்க்கும் உங்களின் நோக்கம் உள்நோக்கம் கொண்டது. சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு அதிமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது என்று தெரிவித்தனர். மேலும், வழக்கு தொடர்ந்த அதிமுக எம்பி சிவி சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
அதிமுக
இந்த நிலையில் அதிமுகவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது எனவும், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கே அதிமுக துரோகம் செய்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார் திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் திமுக அரசுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
திமுக
இதனால் 2019 ஆம் ஆண்டு முதல் திமுக அணைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறது. இதை தாங்கிக் கொள்ளமுடியாத எடப்பாடி பழனிசாமி காழ்ப்புணர்ச்சியில் அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை அறிமுகம் செய்த உடன் புதியதாக ஏதோ கண்டுபிடித்தது போலவும், புதியதாக ஞானோதயம் வந்தது போலவும் சி.வி.சண்முகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் திட்டம் வைக்க கூடாது என வழக்கு தொடுத்துள்ளார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா
ஆனால், உண்மையை யாரும் மறுத்துவிட முடியாது. அதிமுக ஆட்சி காலத்தில் 25 திட்டங்களுக்கு அம்மா பெயர் வைத்தனர். இதை எல்லாம் திமுக நீதிமன்றம் சென்று தடுக்கவில்லை. மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட பெயர் மாற்றம் செய்யாமல் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்திற்கு எதிரான வழக்கு அல்ல இது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு எதிராக வழக்கு தொடுத்து அதிமுக பெரிய துரோகம் செய்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின்
இந்த வழக்கில் கேவலமான அரசியல் செய்யக்கூடாது என அதிமுகவிற்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. ஜெயலலிதாவிற்கு அனைத்தையும் செய்தது திமுக தான், ஜெயலலிதா பெயரில் கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை அதையும் நீதிமன்றம் சென்று ஒப்புதல் பெற்றது திமுக தான். எடப்பாடி பழனிசாமி இனிமேல் திருத்திக் கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடி
காந்தி, நேரு பெயரில் திட்டங்கள் இருக்கக் கூடாது என பிரதமர் மோடி சொல்கிறார். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரில் திட்டங்கள் இருக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுக்கிறார். இவர்கள் இருவருக்கும் என்ன வித்தியாசம்?" என்றார்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications