Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜீவ் வெடித்து சிதறியதை கண்ணால் பார்த்துவிட்டு எஸ்கேப்பான A1 நளினி.. உச்சநீதிமன்ற தீர்ப்பு சொன்னது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என தொடர்ந்து பேசிவருகிறார் சிறையில் இருந்து விடுதலையான நளினி. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ராஜீவ் கொலை வழக்கில் உயிருடன் இருக்கும் முதல் குற்றவாளி நளினி என திட்டவட்டமாக கூறி காரணங்களையும் விளக்கி இருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முதல் குற்றவாளியான நளினியின் தூக்கு தண்டனையை உறுதி செய்து 1999-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சில பகுதிகள்: 1991-ம் ஆண்டு ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடனிருந்த உயிரோடு இருப்பது நளினி மட்டும்தான். சென்னையில் தனியார் நிறுவன மேலாளரின் தனி உதவியாளராக பணியாற்றினார்.

1991-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர் முத்துராஜாவால் சென்னைக்கு கொண்டுவரப்பட்டவர் 3-வது குற்றவாளி இலங்கையைச் சேர்ந்த முருகன். முத்துராஜாதான், முருகனை நளினியின் தாயார் பத்மா மற்றும் சகோதரர் பாக்கியநாதனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். குடும்பத்தினர், நண்பர்கள் மூலம் தமது அலுவலகத்தில் முருகனை சந்தித்தார் நளினி. பின்னர் முருகனை நளினி காதலித்தார். முருகனை நளினி திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் தடையாக இருந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 சுபா, தணு, நளினி

சுபா, தணு, நளினி

சிபிஐ தரப்பின்படி, திருமணத்துக்குப் பின்னர்தான் தாம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய நபர்; விடுதலைப் புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மானால் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன் என்ற விவரத்தை நளினியிடம் முருகன் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிவராசனின் கீழ் தாம் பணிசெய்வதாகவும் முருகன் தெரிவித்திருந்தார்.
வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டை நளினி காலி செய்ய முடிவெடுத்தார். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சுபா மற்றும் தணு (ராஜீவ் காந்தியை படுகொலை செய்த மனித வெடிகுண்டு) ஆகியோரை நளினியுடன் தங்க வைக்க வேண்டும் என்பதற்காக அந்த வீட்டை நளினி காலி செய்ய முருகன் அனுமதிக்கவில்லை. ஆனால் இருவரும் நளினியுடன் தங்கவில்லை. அதேநேரத்தில் நளினி வீட்டுக்கு வந்து சென்றனர்.

 ராஜீவை வெறுத்த நளினி

ராஜீவை வெறுத்த நளினி

சிபிஐ தரப்பின்படி, சுபா மற்றும் தணு இருவரும் விடுதலைப் புலிகள் இயக்க பெண் போராளிகள் என்பதும் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக தங்களை ஒப்படைத்தவர்கள் என்பதும் நளினிக்கு தெரியும். அத்துடன் இலங்கைக்கு ராஜீவ்காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படை நிகழ்த்திய கொடுமைகளை நளினியிடம் சுபாவும் தணுவும் கூறியும் இருக்கின்றனர். இவை அனைத்தும் ஏ-1 (A1) நளினி, ராஜீவ் காந்தி மீது வெறுப்பு கொண்டவராக இருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது. சாத்தான் படைகள் என்ற (இந்திய அமைதிப் படை படுகொலைகள் தொடர்பான விடுதலைப் புலிகளின் வெளியீடு- அச்சிட்டது நளினியின் சகோதரர் பாக்கியநாதன்) புத்தகம் மூலம் ராஜீவ் காந்திக்கு எதிரான வெறுப்பை கொண்டிருந்தார் நளினி.

விபி சிங் நிகழ்ச்சியில் ஒத்திகைக்கு உடந்தை

விபி சிங் நிகழ்ச்சியில் ஒத்திகைக்கு உடந்தை

1991-ம் ஆண்டு மே 2-ந் தேதி நளினியின் வீட்டுக்கு சுபா, தணுவை சிவராசன் அழைத்து வந்தார். அப்போது இந்திய தலைவர்களுக்கு நாங்கள் பொது கூட்டங்களில் மாலை அணிவிக்க போகிறோம் என சிவராசன் நளினியிடம் கூறியிருக்கிறார். இதனடிப்படையில் யாரோ ஒரு தலைவரை கொலை செய்ய போகிறார்க என்கிற உள்ளுணர்வு நளினிக்கு ஏற்பட்டது. சுபா, தணு இருவர் மீது சந்தேகம் ஏற்படாதபடி இருக்க நளினியின் இந்திய அடையாளம் தேவை என்பது குறித்தும் சிவராசன் கூறியிருக்கிறார். இதனையடுத்தே அனைவரும் முன்னாள் பிரதமர் விபி சிங் நிகழ்ச்சிக்கு சென்று ஒத்திகை பார்த்திருக்கின்றனர்.

ராஜீவ் கொலை சதியில் நளினி

ராஜீவ் கொலை சதியில் நளினி

விபி சிங் நிகழ்ச்சியில் தணு, சுபா இருவரும் மாலை அணிவிக்கும் படங்களை எடுக்க வேண்டும் என நளினியிடன் முருகன் கூறினார். ஆனால் சுபா, தணு இருவரும் மேடைக்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. விபி சிங் மேடை அருகே வந்த போது மாலையை அவரிடம் கொடுக்க மட்டுமே அவர்களால் முடிந்தது. இதனை நளினி படம் பிடிக்க முயன்றும் கேமராவை அவரால் இயக்க முடியாமல் போனது. 1991-ம் ஆண்டு மே 11-ந் தேதி நளினி, சுபா, தணு மூவரும் புரசைவாக்கத்தில் ஷாப்பிங் சென்று உடைகள் வாங்கி உள்ளனர். 1991-ம் ஆண்டு மே 19-ந் தேதி ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்கு வருவது தொடர்பாக நளினி, சுபா, தணு மூவரிடமும் சிவராசன் விளக்கினார். ராஜீவ் காந்தியின் மே 21-ந் தேதி ஶ்ரீபெரும்புதூர், மே 22-ந் தேதி புதுச்சேரி கூட்டங்களுக்கு செல்ல வேண்டு எனவும் சிவராசன் மூவரிடமும் தெரிவித்தார். இதற்காக அலுவலகத்தில் லீவ் எடுத்துக் கொள்ள வேண்டும் என சிவராசன், நளினியிடம் கூறியிருக்கிறார். அப்போதுதான் ராஜீவ் காந்தியைதான் இவர்கள் டார்கெட் செய்திருக்கிறார் என்பதை திடமாக உணர்ந்தார் நளினி.

 ராஜீவ் வெடித்து சிதறியதை கண்ணால் பார்த்த நளினி

ராஜீவ் வெடித்து சிதறியதை கண்ணால் பார்த்த நளினி

ஶ்ரீபெரும்புதூர் செல்வது என சிவராசன் உத்தரவின் பேரில் சுபா, தாணு முடிவு செய்த நிலையில் நளினி, காஞ்சிபுரத்துக்கு போய் பட்டு சேலைகள் வாங்க போகிறேன் என சொல்லிவிட்டு அலுவலகத்தில் அரைநாள் லீவ் போட்டார். 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி மாலை 3.45 மணிக்கு நளினி வீட்டுக்கு சிவராசன், சுபா, தணு மூவரும் சென்றனர். அப்போது, ராஜீவ் காந்தியை படுகொலை செய்து சரித்திரம் படைக்கப் போகிறோம்.. இந்த தருணத்தில் நீங்களும் வரவேண்டும் என கேட்டார். நளினியும் ஒப்புக் கொண்டார். ஶ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் நளினி, சுபா, தணு மூவரும் தங்களது ரோல் என்ன என்பது குறித்து விவாதித்தனர். ராஜீவ் காந்தியை படுகொலை செய்துவிட்டு சுபாவை நளினி, சிவராசனின் மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பாக தங்க வைக்க உத்தரவிடப்பட்டது. சுபாவையும் தணுவையும் பாதுகாப்பாக மேடைக்கு அருகே நளினி கொண்டு சேர்க்க வேண்டும். ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின், நளினியும் சுபாவும் இந்திரா காந்தி சிலை அருகே சிவராசனுக்காக 10 நிமிடம் காத்திருக்க வேண்டும்; சிவராசன் அப்படி வராமல் போனால் நளினியும் சுபாவும் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் திட்டமிட்டுக் கொண்டனர்.
ராஜீவ் காந்தியை தணு மனித வெடிகுண்டால் படுகொலை செய்த உடனே சுபாவும் நளினியும் இந்திரா காந்தி சிலையை நோக்கி ஓடினார்கள். அங்கே சிவராசனுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த சிவராசன், வெள்ளை துணியால் சுற்றப்பட்டிருந்த கைத் துப்பாக்கியை எடுத்து நளினியிடம் கொடுத்து அதை சுபாவிடம் தர சொன்னார். அதன்பின்னர் ஆட்டோ மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் 4 நாட்கள் நளினி வீட்டில் அனைவரும் தங்கி இருந்தனர். மே 25-ந் தேதி, அனைவரும் திருப்பதி செல்லப் போவதாக சிவராசன் கூறினார். டாக்ஸி ஒன்றில் அனைவரும் திருப்பதி செல்ல, நளினி அங்கபிரதட்சணம் செய்தார். பின்னர் அனைவரும் சென்னை திரும்பினர். 1991-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி வரை நளினி அலுவலகத்துக்கு எப்போதும் போல சென்று வந்தார். அன்றைய தினம் ரூ25,000-த்தை தன்னுடன் பணிபுரிபவரிடம் கொடுத்து டிராயரில் வைக்க சொன்னார் நளினி. பின்னர் நளினியையும் முருகனையும் இலங்கைக்கு செல்ல சிவராசன் உத்தரவிட்டார். ஆனால் நளினி செல்ல மறுத்தார். அப்போது தாம் கர்ப்பமாக இருப்பதை நளினி உணர்ந்தார்.

சிக்கிய நளினி

சிக்கிய நளினி

அதற்கு மறுநாள் சிபிஐ விசாரணைக்கு அஞ்சி, தனது தாயார் பத்மாவுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்தார் நளினி. இதற்காக மருந்து கடையில் விஷமும் வாங்கி வந்தார் நளினி. ஆனால் அதனை கைவிட்டுவிட்டனர். பின்னர் நளினியும் முருகனும் சென்னையைவிட்டு தப்பி சென்றனர். அதன்பின்னர் நளினி வேலைக்கு செல்லவில்லை. நளினியும் முருகனும் திருப்பதி சென்று லாட்ஜில் தங்கி இருந்தனர். பின்னர் மதுரை, பெங்களூர் சென்ற நளினி- முருகன் ஜோடி, விழுப்புரம் வழியாக சென்னை திரும்பியது. விழுப்புரத்தில் இருந்து பேருந்தில் சென்னை சைதாப்பேட்டைக்கு ஜூன் 14-ந் தேதி நளினியும் முருகனும் வந்து இறங்கினர். அவர்களை அங்கேயே போலீஸ் கைது செய்தது. அப்போது நளினிக்கு 24 வயது. 2 மாத கர்ப்பமாக இருந்தார் நளினி. இப்படியாக விவரித்தது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் நளினியோ தமக்கும் ராஜீவ் கொலைக்கும் தொடர்பே இல்லை என திரும்ப திரும்ப கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+