Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒருத்தரும்" தப்ப முடியாது.. வந்தாச்சு "கழுகுப்பார்வை".. கண்ணப்பன் சொல்றதை கேட்டீங்களா.. திமுக அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கிக் கல்வி பயின்று வரும் மாணவியரின் நலனுக்காக, தமிழக அரசு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, திமுக மாநில மகளிரணி இணைச்செயலாளரும், மகளிர் ஆணையத்தின் தலைவருமான குமரி, நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்திருந்தார்.
அப்போது அவரிடம், எஸ்சிஎஸ்டி விடுதிகளில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதி செய்யப்படுகிறது? அதுபோன்ற ஹாஸ்டல்களில் என்னென்ன வசதிகளை செய்து தரப்படுகிறது என்று கேள்வி எழுப்பினோம்..

Surprise announcement by minister raja kannappan and special news for obc people

குமரி பேட்டி: அதற்கு குமரி நம்மிடம் சொல்லும்போது, "முதலில் நம்மை பாதுகாக்கும் சட்டங்கள் என்னென்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.. மகளிர் ஆணையம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டு வருகிறது. பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், அது குறித்த நடவடிக்கையையும் துரிதப்படுத்தி உள்ளோம். பெண்களுக்கு அரசு தரும் திட்டங்கள், மற்றும் பெண்களுக்கான சட்டங்களை, அவர்களிடம் எடுத்து சொல்லப்பட்டு வருகிறது.

குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களை "ப்ளாக் ஸ்பாட்" என்போம்.. இந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், 181 ஹெல்ப் லைன் பற்றி பெண்களிடம் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.. ஆதரவற்ற, முதியோர் இல்லம், மற்றும் பெண்கள் தங்கும் விடுதி குறிப்பாக, எஸ்சிஎஸ்டி விடுதிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா? சாப்பாடு தரமானதாக இருக்கிறதா என்றெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம்.. தமிழகம் முழுவதும் சிறப்பான மாவட்ட கலெக்டர்கள் இருப்பதால், குறைகள் ஏதேனும் இருந்தாலும், அதை உடனடியாக நிவர்த்தி செய்துவிடுகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

ராஜகண்ணப்பன்: அதற்கேற்றவாறு, நேற்றைய தினம் அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ள அறிவிப்புகள் மிகுந்த நம்பிக்கையை பெற்றோர்கள், பெண்கள், மாணவர்களிடம் ஏற்படுத்தி வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில் துறை சார்ந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்புகள் இவைகள்தான்:

"பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கிப் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 26,433 மாணவ/ மாணவியருக்கு தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வினா வங்கி 25 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளுக்கு தலா ரூ.65 ஆயிரம் மதிப்பில் இடியாப்ப அச்சு இயந்திரம் 1 கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

ஹாஸ்டல்கள்: பள்ளி விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் 368 மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி மாணவியர் விடுதிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் 75 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். தொழில் அனுபவம் மிக்க, வெளிமுகமை (Professional Outsourcing Agency) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சிறுபான்மையினர் மாணவ, மாணவியர் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தூய்மைப் பணிகளுக்காகவும், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் 5 கோடி ரூபாய் வழங்கப்படும்.

385 மிகப் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி மாணவியர் விடுதி ஒன்றுக்கு 43"LED தொலைக்காட்சி ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் மற்றும் 1 DTH இணைப்பு ஆண்டொன்றுக்கு ரூ.2400 என 1 கோடியே 56 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும். 141 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கிக் கல்வி பயின்று வரும் மாணவியரின் உடல் நலத்தைப் பேணவும், விடுதியின் சுற்றுப்புறம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கவும் மாணவியர் விடுதிகளுக்கு சுகாதார குட்டை தகளி (Napkin incinerator) 45 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

உண்டு உறைவிட பள்ளி: அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை மேம்படுத்துவதற்காக தரை தளங்களில் டைல்ஸ் பொருத்தும் பணிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்களின் சுவர்களுக்கு வெள்ளையடித்து வர்ணம் பூசும் பணிகள் 5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாவட்டம் கொண்டம நாயக்கன்பட்டியில் ஒரு உண்டு உறைவிட பள்ளி 50 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்படும். மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 295 அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் மற்றும் புத்தக அலமாறிகள் 75 லட்சம் செலவில் வழங்கப்படும்" என்று அறிவித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+