சிக்ஸர் அடித்த தமிழக அரசு.. "கலைஞரின் கனவு இல்லம்" நனவாகிறது! வீடு வழங்க ரூ.1 லட்சம் கடன்! சர்ப்ரைஸ்
சென்னை: கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.. இதற்கான முக்கிய நடவடிக்கையை கூட்டுறவு துறை முன்னெடுத்திருக்கிறது.
வீடு இல்லாதவர்களுக்கெல்லாம், நிரந்தரமாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை மறைந்த முதல்வர் கருணாநிதியால், கடந்த 1975ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில், "கலைஞரின் வீடு வழங்கும் திட்டம்" புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது.

கணக்கெடுப்பு: அதாவது, ஊரகப்பகுதிகளை குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.. அந்தவகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கிராமப்பகுதிகளில் கிட்டத்தட்ட 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், நடந்து முடிந்த தமிழக பட்ஜெட்டின்போது, தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.. அப்போது சட்டசபையில் அமைச்சர் சொன்னதாவது:
இலவச வீட்டு மனை: "குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கி கொள்ளும் குறிப்பிடத்தக்க அம்சங்களை தாங்கி புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்" என்று தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
எதிர்பார்ப்புகள்: அதுமட்டுமல்ல, திட்ட மதிப்பீட்டிற்கும் அதிகமாக செலவுகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள், அதை கூட்டுறவு வங்கிகளில் கடனாக பெறலாம் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இதற்கான எதிர்பார்ப்புகள் எகிறிவந்தன.
இப்படிப்பட்ட சூழலில், "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த, மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதலை, கூட்டுறவு துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு துறையானது, அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது..
திருத்தம்: அதில், "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட வளர்ச்சி முகமையால் கண்டறியப்பட்டு, கலெக்டர் ஒப்புதல் அளித்த பயனாளிகளுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணை, ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம் ஆகும். இதில், வட்டி விகிதம், 9.50 சதவீதம் - 10 சதவீதம். கடனை, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் திரும்ப செலுத்தலாம்... இதுதொடர்பாக, கூட்டுறவு வங்களில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications