ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் எப்போது வரப்போகுது பாருங்க! AC ரயிலில் வந்தாச்சு ஹேப்பி! இத்தனை வசதிகளா
சென்னை: வந்தே பாரத் ரயில்கள், பயணிகளிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.. இதையடுத்து, வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை குறைத்து, ஸ்லீப்பர் வசதியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க போவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால், இதுவரை இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரவில்லை.. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்வதென்ன?
அதாவது பல்வேறு மண்டலங்களுக்கு கீழ் ஸ்லீப்பர் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் பட்டியல் அளிக்கப்பட உள்ளதாகவும், இதில் 16 பெட்டிகள், 24 பெட்டிகள் என 2 வகையான ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டு, அடுத்த இரு ஆண்டுகளில் 50 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஸ்லீப்பர் வந்தே பாரத்
அதுமட்டுமல்ல, 24 பெட்டிகள் கொண்ட 50 வந்தே பாரத் ரயில்களுக்கு, 1,200 பெட்டிகள் தயாரிக்கும் பணியை ஆரம்பிக்க உள்ளதாகவும், ஒவ்வொரு வந்தே பாரத் தூங்கும் வசதி பெட்டி உடைய ரயிலும், தலா 120 கோடி ரூபாயில் தயாரித்து இரவு நேரங்களில் இயக்க உள்ளதாகவும் ரயில்வே திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருந்தன.
இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத்ரயில்கள், நீண்ட நேர பயணத்திற்கு ஏற்றவாறு மிருதுவாக இல்லை, கடினமாக இருப்பதாக பயணிகள் புகார் சொல்லவும், சிலீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரித்து, இரவு நேரங்களில் இயக்க, ரயில்வே திட்டமிட்டது..
அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்தில், முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள், கடந்த வருடம் துவங்கி முழுமை பெற்றது.. இந்த பெட்டிகளை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆய்வு செய்திருந்தார்.
ஏசி பெட்டியில் வசதிகள்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த ரயில், சென்னை ஐசிஎப் ஆலைக்கு வந்தது. இதில், 16 AC பெட்டிகள் உள்ளன. ஆரஞ்ச், மஞ்சள் நிறங்களில் பெட்டிகளின் அலங்காரம் கண்ணை கவர்ந்துள்ளது.. முதல் வகுப்பு பெட்டியில், வெந்நீரில் குளிக்கும் வசதியும் உள்ளது.
ஒவ்வொரு இருக்கையிலும், புத்தகங்கள் வாசிப்பதற்கு வசதியாக, எல்இடி மின் விளக்கு, செல்போன், லேப்டாப் சார்ஜிங் பாயின்ட் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.. AC பெட்டியில், மேல் படுக்கைக்கு செல்ல ஏணி வசதியும் உள்ளது.
ஒவ்வொரு பெட்டியிலும் தனித்தனியாக சின்ன சின்ன ஓட்டல், உணவு பதப்படுத்தி வைக்க குளிர்பதன பெட்டி வசதியும், சூடாக உணவு பரிமாறுவதற்கு தனி வசதியும் செய்யப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா, ரயில்கள் மோதலை தடுக்கும் தொழில்நுட்பம் என்று 30 வசதிகள் இடம் பெற்றுள்ளன.
சோதனை ஓட்டமும் முடிந்தது
இந்தரயிலை சென்னை ஐசிஎப்-க்கு கொண்டு வரப்பட்டு, இங்குள்ள ரயில் பாதையில் இயக்கி, பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.. பிறகு ராஜஸ்தான் மாநிலம் கோட்டா - லாபன் இடையே மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.
இந்த ரயிலின் இயக்கம், பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்ப திறன், பயணியர் வசதிகள் குறித்து, வல்லுனர்கள் குழு ஆய்வு நடத்தி, சோதனை அறிக்கையை, ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் வழங்கி, அவரது ஒப்புதல் பெற்ற பின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரயில்வே அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
ஆனால், முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலை, பல்வேறு கட்ட சோதனை நடந்து முடிந்த 6 மாதங்களாகிவிட்ட நிலையில் ஆணையரும் ஒப்புதல் தந்துவிட்ட நிலையில், இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது, பயணியர் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி வருகிறதாம்.
இறுதிகட்டம் இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில், மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் உடையது. நீண்ட துாரம் செல்லும் தடத்தில், ஸ்லீப்பர் ரயில் ஒன்று மட்டுமே போதாது. இன்னொரு ரயிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதப்படுகிறது. 2வது ரயில் தயாரிப்பும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்பிறகு, இந்த ரயில் போக்குவரத்து துவங்கும் என்று உறுதி தந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications