மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. கரண்ட் பில் ரீடிங் எடுக்கும் ஊழியர்களுக்கு ஊதியம்.. அரசு ஊழியர்கள் குஷி
சென்னை: மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மொபைல் போன் அல்லது, டேப்லெட் வாங்கும் விலையில், 10,000 ரூபாய் வழங்க, மின் வாரியம் சமீபத்தில் உத்தரவிட்டு திகைப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.. தங்களது ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று பணியாளர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் (TNPDCL) மூலம் மாநிலத்தின் மின்சார தேவை நிர்வகிக்கப்பட்டு வருகிறது.. அதேபோல, மின்சார உற்பத்தி, கொள்முதல், பயனாளர்களுக்கு தேவையான வசதிகள், சிக்கல்கள், புதிய திட்டங்கள் போன்றவையும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போன் ஆப் ரீடிங்
இதில், வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களில் கரண்ட் பில் அளவிடுவதற்காக, மின் வாரிய ஊழியர்கள் நேரிலேயே வந்து ரீடிங் எடுப்பது வழக்கமாகும்.. எனினும் கணக்கெடுக்கும் பணியில் நவீனமயமாக்கல் துவங்கப்பட்டுள்ளது.. அதன்படி, ஆண்ட்ராய்டு போன் மூலம் பிரத்யேக ஆப்பில் ரீடிங்கை பதிவிட்டால், அது உடனே சர்வரில் பதிவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட பயனாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இதனிடையே, மின் வாரிய ஊழியர்கள் தங்களது போனில் பிரத்யேக மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்தும்போது, நெட்வொர்க் ஸ்லோவாக இருப்பதாக தெரிகிறது.. சிலசமயம் செல்போனும் சிக்கலை தந்துவிடுகிறது. எனவேதான், தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் வாரியக் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு, ஊழியர்களுக்கு புதிதாக ஆண்ட்ராய்டு போன் வாங்கி கொள்ள அனுமதி தரப்பட்டது.
மின் ஊழியர்கள்
அதன்படி, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மொபைல் போன் அல்லது, டேப்லெட் வாங்கும் விலையில், 10000 ரூபாய் வழங்க, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மொபைல் போன் வாங்கிய பிறகு, அதன் விலையில், 10,000 ரூபாயை மட்டும் நிர்வாகம் வழங்கும்.
இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், இதற்கு பதில் நிர்வாகமே மொபைல் போன் வாங்கி தருமாறு, ஊழியர்கள் கோரிக்கை விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, தேவையற்ற மொபைல் ஆப்கள் எதுவுமின்றி மின்வாரிய தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் வசதியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
சர்ப்ரைஸ் அறிவிப்பு
இதுஒருபுறமிருந்தாலும், மின் ஊழியர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. அதாவது, வீடுகளில் மின் பயன்பாட்டை, 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய பணியாளர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்..
இதில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.. அதனால், ஓய்வுபெற்ற ஊழியர்களையும், இந்த பணியில் வாரியம் ஈடுபடுத்தி வருகிறது. இவர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், ஒரு மின் இணைப்பு கணக்கெடுக்க 4 ரூபாயும், கிராமங்கள், மலைப்பகுதிகளில் கணக்கெடுக்க, 6 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.
7 ரூபாய் - சூப்பர்ல
இந்த தொகையை உயர்த்தி வழங்குமாறு, ஓய்வுபெற்ற பணியாளர்கள் கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.. தற்போது இவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், ஒரு மின் இணைப்பு கணக்கெடுக்க 5 ரூபாயாகவும், கிராமங்கள், மலைப்பகுதிகளில் 7 ரூபாயாகவும் உயர்த்தி, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வானது, மின்வாரிய ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications