விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ்.. அள்ள அள்ள பணம்.. வேளாண் துறைக்கு கூடுதல் நிதி.. மத்திய அரசு குட்நியூஸ்
சென்னை: விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது... அந்தவகையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) அதாவது பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வங்கிக்கணக்கு: இதில், ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. அந்தவகையில், நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 3 கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்...
அதேபோல, விவசாயிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஆண்டுத்தொகை, இந்த பட்ஜெட்டில் ரூ.12000 ஆக உயர்த்தப்பட்டு, தவணை மூன்றிலிருந்து 4ஆக உயர்த்தப்படலாம் என்றும், வருடத்திற்கு இனி 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாய் உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.
விவசாயிகள்: அதேபோல, விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், "பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையை ஆரம்பமாகி உள்ளது. இதில் கோதுமை மாவு ஒரு கிலோவுக்கு ரூ. 27.50-க்கு மிகாமல் சில்லறை விலையில் கிடைக்கிறது. மற்றொருபுறம் 'பாரத் ரைஸ் ' என்று சொல்லக்கூடிய பாரத் அரிசியை கொண்டுவந்துள்ளது. கிலோ ரூ.29 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு சலுகைகளையும் அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டு வருவதால்தான், நம்முடைய நாட்டில் சமீப காலமாகவே, வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சி 4.4 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
வருவாய்: அதாவது, ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கான அகில இந்திய எடையுள்ள சராசரி உற்பத்தி செலவைவிட குறைந்தபட்சம் 50 சதவீதம் வரையிலும் கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. இதன்காரணமாகவே, சுமார் 1.6 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பலன் பெற்று வருகின்றனர்.
இப்படி, விவசாயிகளுக்கு நலன்பெறக்கூடிய, வருமானம் கிடைக்கக்கூடிய பல்வேறு அதிரடிகளை மத்திய அரசு செய்து வரும் நிலையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதிகரிப்பு: விவசாயிகளுக்கான உணவு தானியங்களை கொள்முதல் செய்வதற்கான செலவு, 1.02 லட்சம் கோடியில் இருந்து 2.28 லட்சம் கோடியாக இப்போது அதிகரித்துள்ளதாகவும், விவசாயிகளின் வளர்ச்சி தற்போது மேம்பட்டு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் என்றும், வேளாண் துறைக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பானது, விவசாயிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியையும், கூடுதல் நம்பிக்கையையும் பெற்று தருகிறது. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், விவசாயிகளின் ஆதரவை பெறும்வகையில், சில சர்ப்ரைஸ் அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications