சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆயுஷ் அமைச்சகம் அசத்தல் ஏற்பாடு.. பொங்கல் நாளில் மெகா சூரிய நமஸ்காரம்..1 கோடி பேர் பங்கேற்க வாய்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: மகர சங்கராந்தியை ஒட்டி உலகளாவிய சூரிய நமஸ்கார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 1 கோடி பேர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் போன்று அறுவடைத்திருநாள் நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தியாகவும் தை பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உத்தராயண காலமாக கடைபிடிக்கப்படுகிறது.

கிடைத்தது 4 வாரம் ஜாமீன்.. சிறையிலிருந்து ரிலீசாகிறார் ராஜேந்திர பாலாஜி.. உச்சநீதிமன்றம் உத்தரவு கிடைத்தது 4 வாரம் ஜாமீன்.. சிறையிலிருந்து ரிலீசாகிறார் ராஜேந்திர பாலாஜி.. உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியா மட்டுமில்லாமல் தெற்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நோபாளம், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் இந்து மக்களால் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. மகர ராசிக்குள் சூரியன் பயணிக்கும் மாதம் மகர சங்கராந்தி என்றழைக்கப்படுகிறது.

சங்கராந்தி விழா

சங்கராந்தி விழா

சீக்கிய மற்றும் வடஇந்திய மக்கள் லோஹ்ரி என்றும், மத்திய இந்தியர்கள் சுகாரத் என்றும், அசாம் இந்துக்கள் 'பொகாலி பிகு' என்றும் சங்கராந்தியை அழைக்கின்றனர். இப்பண்டிகையின்போது பெரும்பாலும் இனிப்பு உணவுப்பண்டங்களே தயாரிக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் எள்ளுருண்டை, பிற இனிப்பு உணவுகள் தயாரிக்கப்படும்.

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம்

தமிழ்நாட்டில் பால், வெல்லம் நெய் சேர்த்து செய்யும் பச்சரிசி பொங்கல், பனங்கிழங்கு மற்றும் கரும்பு வைத்து சூரியக் கடவுளை வணங்குகின்றனர். நாளைய தினம் பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியை ஒட்டி உலகளாவிய சூரிய நமஸ்கார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால்

ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால்

முதலில் 75 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாறாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று ஆன்லைன் வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால், கொரோனா பரவும் இந்த சூழலில் மகர சங்கராந்தி அன்று சூர்ய நமஸ்காரம் செய்வது நல்லது என்று கூறினார்.

 உலகளாவிய யோகா நிகழ்ச்சி

உலகளாவிய யோகா நிகழ்ச்சி

மேலும், இந்த பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் 75 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என இலக்கு நிர்ணயித்திருந்ததாகவும், ஆனால் பதிவு செய்தவர்களை பார்க்கும்போது ஒரு கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
A global Surya Namaskar program has been organized to coincide with Capricorn. According to the Ministry of AYUSH, the event has been organized to thank the sun. It is estimated that 1 crore people will participate in this event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X