ரேஷன்ல வருது மாற்றம்.. நீங்கியது குழப்பம்.. எதையும் நம்பாதீங்க".. அசரடித்த ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன்.. ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டுறவுத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், விழுப்புரத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக ரேஷன் கடைகளில் ஊழியர்கள் சில நேரங்களில் அட்டைதாரர்களை அவர்களுக்கு விருப்பமில்லாத பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார்கள் சமீபகாலமாகவே எழுந்து வருகிறது..

Sweet announcement by ias radhakrishnan and ration shop cooperative departments new information

அரிசி, பருப்புடன் உள்ளிட்ட பொருட்களை தவிர, உப்பு, சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.. இந்த பொருட்களை வாங்க சொல்லித்தான், கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துகிறார்களாம்..

பொருட்கள் விலை: பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து என்ற செய்தியும் பகீரை கிளப்பி வந்ததால், கிராமப்புற மக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகி விட்டனர். இதனால், திட்டமிட்டதைவிட அதிக தொகையை செலவிட நேர்வதாக அட்டைதாரர்கள் குமுறுகிறார்கள். இதுகுறித்து தொடர்ந்து புகார்களை சொல்லி வரும்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, கூட்டுறவுத்துறை அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ரேஷன் கடைகளில் விருப்பமில்லாத பொருட்களை வாங்க சொல்லி ஊழியர்கள் எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.. நியாய விலை கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து என்ற செய்தி கிராமப்புற மக்களை கலக்கத்தில் வைத்திருந்த நிலையில், இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் தெளிவாக தற்போது விளக்கம் அளித்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

மொபைல் ஏடிஎம்: விழுப்புரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வழங்கினார். பிறகு, மொபைல் ஏடிஎம் வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.. இதையடுத்து, அங்குள்ள ரேஷன் கடையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடையில் இருந்த அரிசி மற்றும் பல்பொருட்களை தரத்தை சோதனை செய்தார். தொடர்ந்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழகத்தில் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக கடந்த ஓராண்டில் மட்டும் 15, 726 வழக்குகள் போடப்பட்டு 140 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கவில்லை என்றால் அட்டை ரத்து செய்யப்படும் என்ற வதந்தியை நம்பவேண்டாம். அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. கிராமபுறங்களில் ரேஷன் கடைகளில் கட்டாயப்படுத்தி பொருட்களை பணியாளர்கள் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை.

மாற்றுத்திறனாளிகள்: மீறி கட்டாயப்படுத்தி பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை வங்கிகளில் 71,596 கோடி ரூபாய் வைப்புத்தொகை உள்ளது. கூட்டுறவு வங்கி மூலம் 64 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில், விவசாயக்கடன் மட்டும் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு 13.39 கோடி ரூபாயும் மாற்றுதிறனாளிகளுக்கு 61 கோடி ரூபாய் என 17 வகையான கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

Sweet announcement by ias radhakrishnan and ration shop cooperative departments new information

உலக தரம் வாய்ந்த வங்கியாக கூட்டுறவு வங்கியை மாற்ற நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. தமிழகத்தில் 5,784 ரேஷன் கடைகள் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற கடைகளாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் 34 லட்சம் மெட்ரிக் டன் நெல் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக கடந்த ஓராண்டில் மட்டும் 15, 726 வழக்குகள் போடப்பட்டு 140 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது" என்றார் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+