சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அது" என் கால்தூசிக்கு சமம்.. திடீர்னு வந்த சத்தம்.. மேடையிலேயே "எமோஷனல்" ஆன சைதை துரைசாமி.. அதிசயம்

எம்ஜிஆரின் உரையை பதிவிட்டு, நெகிழ்ந்து பேசினார் சைதை துரைசாமி

Google Oneindia Tamil News

சென்னை: விழா ஒன்றில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேசும்போது, எம்ஜிஆர் உரை குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தது, அதிமுகவினரை புல்லரிக்க வைத்துவிட்டது.

சைதை துரைசாமி - சென்னை முன்னாள் மேயர்.. உலக எம்ஜிஆர் பேரவை தலைவரும்கூட.. எப்போதுமே எம்ஜிஆர் புகழை பாடிக் கொண்டே இருப்பவர்.

இவர் எந்த மேடையேறினாலும் எம்ஜிஆர் என்ற தாரக மந்திரத்தை உச்சரிக்காமல் இருந்ததில்லை.. சில மாதங்களுக்கு முன்புகூட, இவர் ஒரு மேடையில் எம்ஜிஆர் பற்றி பேசி கண்கலங்கியிருந்தார்.

டெய்சி சரணுடனான ஆடியோ! சைதை சாதிக்கைவிட திருச்சி சூர்யா சிவாவின் பேச்சு ரொம்ப மோசம்.. காயத்ரி டெய்சி சரணுடனான ஆடியோ! சைதை சாதிக்கைவிட திருச்சி சூர்யா சிவாவின் பேச்சு ரொம்ப மோசம்.. காயத்ரி

 எம்ஜிஆர்

எம்ஜிஆர்

"என் மறைவிற்கு பின்னால், எத்தனை பேர் பிறந்த நாள் விழா கொண்டாடுகின்றனர் என்பதில் தான், நான் பிறந்து வாழ்ந்ததற்கான அர்த்தம் இருக்கிறது என்றவர் எம்ஜிஆர்.. அதை இப்போது திண்டுக்கல்லில் எம்ஜிஆர் ரசிகர்கள் நிரூபித்து வருகின்றனர். அவர் வாழ்ந்து மறைந்த பிறகும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பதால் தான், 'அவதார புருஷன்' என அழைக்கிறோம்... தன்னுடைய 5 வயதில் சாப்பாடு இல்லை என்பதற்காக நாடக உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்... பல சவால்களை கடந்து வந்தவர் எம்ஜிஆர்..

குண்டுமணி

குண்டுமணி

நாடகத்தின் போது நடிகர் குண்டுமணி எம்ஜிஆர் மீது விழுந்தார்... காயத்தில் இருந்து அவர் மீண்டு வருவது சிரமம் என்றனர். ஆனால், பிறகு தான் அவர் வீறு கொண்டு எழுந்து, சினிமாவில் சிகரம் தொட்டார்.. அது மட்டுமல்லாது எம்ஆர்.ராதா அவரை சுட்டபோது, "அவ்வளவு தான் இனி பேச்சு வராது" என்றனர்.. அதை பொய்யாக்கி வெற்றி படங்களை கொடுத்தார். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவதில், எம்ஜிஆருக்கு இணை அவர் மட்டும்தான்... அரசியலில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்று முறை முதல்வராக பதவி வகித்தார். இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

 சென்ட்ரல் ஸ்டேஷன்

சென்ட்ரல் ஸ்டேஷன்

1980ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். அப்போது எம்ஜிஆர், என்னை அழைத்து, "கவலைப்படாதே. அதிமுகவின் முதல் மேயர்' என்றார். அவரது வாக்கு பலித்து 2011ல் நான் சென்னை மேயரானது கவுன்சிலர்களால் அல்ல. மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டேன்" என்று நெகிழ்ந்து பேசியிருந்தார்.. அதுமட்டுமல்ல சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் கோரிக்கையையும் வைத்தவர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

 சிரித்து வாழ வேண்டும்

சிரித்து வாழ வேண்டும்

இந்நிலையில், எம்ஜிஆர் நடித்த "சிரித்து வாழ வேண்டும்" படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சைதை துரைசாமி பேசுவதற்காக மேடைக்கு வந்தார்.. ஆனால், மைக் முன்பு நின்றுகொண்டு, தன் கையில் இருந்த செல்போனை ஆன் செய்து, இதில் உள்ள எம்ஜிஆர் பேசிய பேச்சை கேளுங்கள்" என்று சொல்லிவிட்டு செல்போனை ஆன் செய்தார்.. ஏதோ ஒரு விழாவில் எம்ஜிஆர் பேசிய அந்த உரையை ஒலிக்க செய்தார்.

 ஜில் ஆடியோ

ஜில் ஆடியோ

எம்ஜிஆர் அதில், "எனக்கு நிறைய மன்றங்களை வைத்து வருகிறீர்கள்... இங்கே ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.. ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்வரை , அவனுக்கு எத்தனை மன்றங்கள், பாராட்டுக்கள் கிடைத்தன என்பது முக்கியம் இல்லை.. அவன் மறைந்த பிறகு, எத்தனை மன்றங்கள், எத்தனை மனிதர்கள் நினைக்கின்றார்கள் என்பதை பொறுத்துதான், நாம் வாழ்ந்ததற்கு ஏதாவது நியாயமான காரணங்கள் இருந்திருக்கிறது என்பதற்கு அது உதவியாக இருக்க முடியும்" என்று அந்த ஆடியோ ஒலிக்கிறது.

 கால் தூசு

கால் தூசு

பிறகு செல்போன் ஆடியோவை நிறுத்திவிட்டு தொடர்ந்து பேசினார் சைதை துரைசாமி.. "இதைதான் என் வாழ்க்கையில் ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகிறேன்.. எம்ஜிஆருக்காகவே வாழ்ந்து மறைய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.. பதவிகளா? தனிமனித கொள்கையா? என்று என்னை கேட்டால், பதவிகள் என் கால்தூசுக்கு சமம்.. என் தலைவனின் பெயரை, புகழை பாடுவதில், கேட்பதில் இருக்கின்ற மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை..

 அவதாரம் + ஆச்சரியம்

அவதாரம் + ஆச்சரியம்

தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுக்க புரட்சி தலைவரின் புகழ் பரவியிருக்கிறது என்று சொன்னால், அவரது பண்புகள்தான் அதற்கு காரணம்.. இந்த படத்தை பார்க்க பெங்களூரில் இருந்து வந்துள்ளார்கள்.. புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஒரு அதிசயம், புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஒரு அவதாரம்.. புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஒரு ஆச்சரியம்.. இன்றும் எம்ஜிஆர், என்றும் எம்ஜிஆர், உலகம் முழுக்க தமிழ் மக்கள் வாழுமிடமெல்லாம் எம்ஜிஆர் இருந்துகொண்டுதான் இருப்பார்" என்றார்.

English summary
Sweet news about MGR and saidai duraisamys speech was mesmerizing mgr
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X