"பவர்".. பொங்கல் பரிசு ரூ.1000 பெற "இது" கட்டாயம்.. பயிர்கடன் தள்ளுபடி வேற லெவல்.. தமிழக அரசு சபாஷ்
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அமைச்சர் பெரியகருப்பன் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்
சென்னை: பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய் எப்படி வழங்கப்படும் என்பது முதல் பயிர்க்கடன் வழங்குவது வரை, பல்வேறு முக்கிய தகவல்களை அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர் இணைந்து அறிவித்துள்ளது, தமிழக மக்களிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
பொங்கல் பரிசு தொகை ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் பெருகி வருகிறது.. இந்நிலையில், சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தபோது, பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 வங்கிக் கணக்கில் வழங்கப்படுமா? அல்லது நேரடியாக கொடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், பதிலளிக்கும்போது, சில முக்கிய தகவல்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தது, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கிஃப்ட் தொகுப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.. ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பண்ணன் சொன்னதாவது: "பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க முதல்வர் அறிவித்துள்ளார்.. அந்த அறிவிப்பினை நிறைவேற்றுகின்ற பொறுப்பு உணவுத்துறைக்கும், கூட்டுறவு துறைக்கும் உள்ளதாகவும் அது பற்றிய நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றது என்பதை ஆய்வு செய்தோம்.

ISO சான்று
பொங்கல் தொகுப்பை முறையாக வழங்க வேண்டும் கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு எந்த விதமான சிக்கல்களும் இருக்கக் கூடாது என்பதற்காக தற்போது அனைத்து கடைகளிலும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.. 8ம் தேதி வரை இந்த டோக்கன் விநியோகம் நடைபெற உள்ளது.. 9ம் தேதி, முதல்வர் சென்னையில் ஏதாவது ஒரு இடத்தில் இந்தத் திட்டத்தை தொடங்க உள்ளார்.. தமிழகத்தில் இருக்கக்கூடிய 35 ஆயிரம் நியாய விலை கடைகளில் தற்போது 4,45 கடைகள் ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற கடைகளாக உயர்த்தப்பட்டுள்ளன.. எஞ்சிய கடைகள் தமிழகம் முழுவதும் 2 ஆண்டு காலத்திற்குள் படிப்படியாக இதே தரத்திற்கு மேம்படுத்தப்படும்..

நேர்காணல்
பொங்கலுக்கு வழங்கப்படும் ரொக்கம் ரூபாய் ஆயிரம், பொருட்கள் வழங்கும்பொழுது நியாய விலை கடைகளில் வழங்கப்படும்.. வங்கிகளில் இப்போது கொடுக்கின்ற உத்தேசம் இல்லை, ஆனால், குறைபாடு இல்லாமல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படும்.. முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வர இயலாதவர்கள் "பவர்" கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கட்டாயம்.. அதில் சுட்டிக்காட்டும் அளவிற்கு ஏதாவது தவறு நடந்திருந்தால் ஆதாரத்துடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. தேவைப்படுகின்ற பற்றாக்குறை இருக்க கூடிய விற்பனையாளர்கள் போன்ற பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க செய்து அவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று கொண்டு இருக்கிறது..

சபாஷ் சாதனை
கடந்த ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்தவர், தானும் ஒரு விவசாயி தோழன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி காலத்தில் அவர்கள் வழங்கிய பயிர் கடன் ஆண்டு ஒன்றுக்கு 6000 கோடி சராசரியாக வழங்கப்பட்டது.. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் மட்டும் 10, 292 கோடி ரூபாய் விவசாயிகளுக்கான பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.. இந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி வரை 10 ஆயிரத்து 361 கோடி ரூபாய் தமிழக வரலாற்றில் இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்..

ரேஷனில் ராகி
இதையடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பைலட் முறையில் ராகி விநியோகிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.. தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ராகி கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. அதன் பிறகு விரைவில் அந்த 2 மாவட்டங்களிலும் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி வழங்கப்படும் என்று மீண்டும் உறுதி தந்துள்ளார்.. ஒரே நேரத்தில் தமிழக அமைச்சர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள், மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications