ஹேப்பி நியூஸ்.. பொங்கல் தொகுப்பில் தமிழக அரசு அதிரடி.. புதிய வழிகாட்டு நெறிமுறை.. என்னன்னு பாருங்க
பொங்கல் கரும்பு குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்புகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு 72 கோடியே 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.. அதன்படி ஒரு கரும்புக்கு போக்குவரத்து செலவு உட்பட 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் விநியோகம் செய்வது தொடர்பாக, தமிழக அரசு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.. அத்துடன், கரும்பு கொள்முதல் செய்ய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வரும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை வழங்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனர்.. இதனால், விவசாயிகளும் ஏமாற்றமடைந்தனர்.

பளீச் அறிவிப்பு
எப்படியும் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் கரும்பு, வெல்லம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. எனவே, இந்த ஆண்டு கரும்பு, வெல்லமும் தமிழக அரசு அதிகளவில் கொள்முதல் செய்யும் என்றும் நம்பப்பட்டு வந்தது.. ஆனால், அப்படி எதுவுமே இல்லாமல், இந்த வருட பொங்கல் அறிவிப்பு, தங்களுக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டதாக கரும்பு விவசாயிகள் கருதுகிறார்களாம்.. எனினும், கரும்பு விவசாயிகளின் அதிருப்தியை போக்கும்வகையில், விரைவில் தமிழக அரசு, முக்கிய அறிவிப்பினை வெளியிடலாம் என்கிறார்கள்.

கலெக்டர்கள்
அதன்படியே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு உடனடியாக வெளியானது.. இதனிடையே, இதுதொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு தமிழ்நாடு விவசாயிகளிடம் இருந்து தான் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்றும் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் கூட்டுறவு, வேளாண்மை அதிகாரிகள் கரும்பை கொள்முதல் செய்வார்கள் என்றும் கூறியிருந்தார்.

பொங்கல் பரிசு
மேலும், இதற்காகவே மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிற. அதில் வேளாண்மை துறை இணை இயக்குநர், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்புகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு 72 கோடியே 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு கரும்புக்கு போக்குவரத்து செலவு உட்பட 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6 அடி கரும்பு
தற்போது கரும்பு கொள்முதல் செய்ய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. அதன் விவரம் இதுதான்: "பன்னீர் கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்; 6 அடிக்கு குறையாத கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்; சராசரி தடிமனை விட கூடுதல் தடிமனாக கரும்பு இருக்க வேண்டும்; நோய் தாக்கிய நிலையில் இருக்கும் பன்னீர் கரும்பினை கொள்முதல் செய்யக் கூடாது.. விவசாயிகள் தரப்பில் இருந்து புகார்களுக்கு இடமளிக்காத வகையில் அந்த மாவட்டங்களில் விளையும் கரும்பை கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நோ புரோக்கர்கள்
கரும்பு விளையாத மாவட்டங்களில் விநியோகம் செய்ய, அருகில் உள்ள மாவட்டங்களில் விளையும் கரும்பினை வழிகாட்டு நெறிமுறைப்படி கொள்முதல் செய்யலாம்.. கரும்பு கொள்முதல் பணியின் போது சிறு, குறு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரே விவசாயியிடம் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யாமல், கிராமம் முழுவதும் கரும்பின் தரம் அடிப்படையில் பரவலாக கொள்முதல் செய்ய வேண்டும். கரும்பு கொள்முதல் பணியில் எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது. கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலையை சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications