தென் மாவட்ட மக்களுக்கு இனிப்பான செய்தி.. சென்னை டூ மதுரை, செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள்.. தெற்கு ரயில்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தசரா, சரஸ்வதி பூஜை பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை தாம்பரம் - செங்கோட்டைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை எழும்பூர் - மதுரை வரை சிறப்பு ரயிலும், சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாளை சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தசரா, சரஸ்வதி பூஜை பண்டிகைகளை ஒட்டி சென்னையில் வசித்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

sweet-news-for-southern-districts-special-trains-from-chennai-to-madurai-and-sengottai-by-southern

5 நாட்கள் விடுமுறை

பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவிக்கும். அதேபோல் தெற்கு ரயில்வேயும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். அந்த வகையில் தான் தற்போது பூஜை பண்டிகை வருகிறது. மொத்தம் 5 நாட்கள் விடுமுறையும் வருகிறது. இதனால் அதிகளவு மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

3 சிறப்பு ரயில்கள்

இதன்படி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து அக்டோபர் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதேபோன்று சென்னை தாம்பரத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு நாளை ஒரு சிறப்பு ரயிலும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நாளை ஒரு சிறப்பு ரயிலும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை டூ திருவனந்தபுரம்

* சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10.15 மணிக்கு இந்த சிறப்பு ரயில் புறப்படுகிறது. மறுநாள் பகல் பகல் 2.05 மணிக்கு இந்த ரயில் திருவனந்தபுரம் வடக்கு நிலையம் சென்றடைகிறது.

* மறுமார்க்கமாக அக்டோபர் 5 ஆம் தேதி திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சென்னை எழும்பூர் வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயிலானது, பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படும்.

தாம்பரம் டூ செங்கோட்டை

சென்னை தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு இந்த ரயில் செங்கோட்டையை சென்றடையும். இந்த ரயிலானது விழுப்புரம், அரியலூர், திருச்சி வழியாக இயக்கப்படும்.

சென்னை டூ மதுரை

இதேபோல் எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு வழி மெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை மதுரை சென்றடைகிறது. இந்த ரயிலானது மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. தமிழக அரசு சார்பிலும் 3,300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+