இந்தியா- பாக். கிரிக்கெட் மேட்ச் உற்சாகம்.. 1 நிமிடத்திற்கு 250 பிரியாணி ஆர்டர்.. ஸ்விக்கி தகவல்
சென்னை: இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின் போது 1 நிமிடத்திற்கு 250 பிரியாணிகளை இந்தியா ஆர்டர் செய்துள்ளதாக உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நேற்று முன் தினம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒரு நாள் சர்வதேச உலகக் கோப்பை போட்டி நடந்தது.

இந்த போட்டியின் போது மிகுந்த உற்சாகத்தில் இரு நாட்டு ரசிகர்களும் இருந்தனர். இந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இந்த நிலையில் மக்கள் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்தவாறே தங்களுக்கு உணவையும் ஆர்டர் செய்தனர்.
அந்த வகையில் எவ்வளவு பிரியாணி ஆர்டர் செய்தார்கள் என்பதை ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஸ்விக்கியில் ஒரு நிமிடத்திற்கு 250 பிரியாணிகளை ஆர்டர் செய்தனராம். போட்டி தொடங்கியதிலிருந்தே பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாம். இதில் சண்டீகரில் உள்ள ஒரு வீட்டில் 5 அல்லது 10 பிரியாணி ஆர்டர் செய்வார்கள் என பார்த்தால் ஒரே நேரத்தில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குளிர்பானங்களை ஆர்டர் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் சிப்ஸ் பாக்கெட்டுகள் நீல ரேப்பர் 10,916 பாக்கெட்டுகளும் பச்சை ரேப்பர் 8,504 பாக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளன. அதே நேரத்தில் 3,509 ஆணுறைகளும் விற்பனையாகின. ஒருவர் 86 வடபாவ்களை ஆர்டர் செய்தாராம். அது உடனடியாக டெலிவரியாகிவிட்டதாம்.
ஸ்விக்கி நிறுவனம் அளித்த சண்டீகர் குடும்பத்தினரின் 70 பிரியாணிகளை ஒரு ஆளை வைத்தா டெலிவரி செய்தார்கள் என இணையத்தில் விவாதம் தொடங்கியுள்ளதாம். ஆனால் பலர் ஒரு ஆளை வைத்து எப்படி ஒரே நேரத்தில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.

பாகிஸ்தானை இந்தியா வென்றதால் அன்று இரவு முழுவதும் இந்தியாவிலும் இந்தியர்கள் வசிக்கும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாட்டம் நிகழ்ந்தது. அது போல் இந்தியா வென்றதற்கு மதுபானங்களை பீய்ச்சி அடித்தும் பல ரசிகர்கள் கொண்டாடினர். எனவே மதுபானங்களின் விற்பனையும் களைகட்டியிருக்கும் என்றே தெரிகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications