Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பன்றிக்காய்ச்சல் பரவல்.. 282 குழந்தைகளுக்கு இன்புளுயன்ஸா..அச்சம் வேண்டாம் என்கிறார் மா.சுப்ரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எச்1என்1 வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அரசுமருத்துவமனைகளிலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பருவகால நோய்களால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பருவ நிலைக்கு ஏற்ப பறவை காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல், என்று ஒவ்வொன்றும் புதிது புதிதாக முளைக்கும். அப்படி வரும் காய்ச்சலில் சமீப வருடங்களாக இடம்பிடித்திருக்கிறது ஃப்ளூ காய்ச்சல் எனப்படும் பன்றி காய்ச்சல். கொடிய கொரோனா வைரஸ் காய்ச்சல் வந்து சென்ற பின்னர் பன்றிக்காய்ச்சல் சாதாரணமாகி விட்டது.
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பருவநிலை மாற்றம் காரணமாக மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.

தவறான தகவல்

தவறான தகவல்

எழும்பூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் நலம் விசாரித்தார்.செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கடந்த 2 ஆண்டுகளில் முகக்கவசம் உள்ளிட்டவை பின்பற்றப்பட்டதால் காய்ச்சல் குறைவாக இருந்தது, படுக்கைகள் இல்லாமல் மருத்துவமனைகள் நிரம்பி வருவதாக கூறுவது தவறான தகவல் எனவும் அவர் கூறினார்.

 பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

எச்1என்1 காய்ச்சல் பரவல் காரணமாக 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி ஆகியவை இன்புளுயன்சா காய்ச்சலின் அறிகுறிகள் எனவும் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளிடம் இருந்து மற்ற குழந்தைகள் விலகி இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

 தனிநபர் இடைவெளி

தனிநபர் இடைவெளி

தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் இன்புளுயன்சா காய்ச்சலானது இருமல் மற்றும் தும்மல் மூலமாக வெளியாகும் நீர் திவலைகள் வழியாக பரவுகிறது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 அதிவேக பரவல்

அதிவேக பரவல்

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் தற்போது வரை பன்றிக்காய்ச்சல் இல்லை. டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக ஊரக வளர்ச்சி துறை, நகர்ப்புற வளர்ச்சி துறை, மக்கள் நல்வாழ்வு துறை என மூன்று துறையும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாவட்ட வாரியாக பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்த பகுதியிலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இல்லை என்றும் கூறியிருந்த நிலையில் இந்த வாரம் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்

இருமல், காய்ச்சல், தொண்டை புண், வலிகள், சோர்வு மற்றும் தலை வலி ஆகியவைகளே பன்றி காய்ச்சலின் அறிகுறிகள். சில நேரங்களில் வாந்தியும் வயிற்று போக்கும் கூட ஏற்படும். மூக்கு மற்றும் வாயை ஒரு துணியை கொண்டு மூடிக் கொள்வது அவசியமாகும். பாதிக்கப்பட்ட சில மேற்பரப்புகளை தொடும் போது, கைகளை கழுவ வேண்டும். முடிந்த வரை இந்த கிருமியால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கி பழகாமல் இருப்பது நல்லது.

காய்ச்சல் பரவக்காரணம்

காய்ச்சல் பரவக்காரணம்


கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்து கொண்டனர். சுகாதாரமான உணவுகளை உட்கொண்டனர். இதனால் பன்றிக்காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மக்கள் பலரும் அஜாக்கிரதையாக இருக்கின்றனர். இதன்காரணமாகவே பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். இந்த காய்ச்சலைக் கண்டு மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+