Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடுதலை, விசாரணை படங்கள் அருவருப்பா இருக்கு.. சைலேந்திர பாபு ஓபன் டாக்! சிங்கம், சாமியை பிடிக்குமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிமாறன் இயக்கிய விடுதலை, விசாரணை படங்கள் அருவருப்பாக இருந்ததாகவும், சாமி, சிங்கம், படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் ஓய்வுபெற்ற தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்டார். அதில் நெறியாளர் "வெற்றிமாறனின் விசாரணை, விடுதலை படங்கள், தமிழ் இயக்கிய டாணாக்காரன் படங்கள் போலீசாரின் அதிகாரம் பற்றி கேள்வி எழுப்புகின்றன. காவல்துறையில் மாற்றம் வர வேண்டும் என்கின்றன. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

Sylendra babu said Visaranai, Viduthalai films are disgusting against Police

இதற்கு பதிலளித்த சைலேந்திர பாபு, "காவல்துறையில் மாற்றம் கண்டிப்பாக வர வேண்டும். காவல்துறை ஏற்பட்ட காலத்தில் இருந்தே அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இதுபோன்ற சினிமாக்கள் பொய்யின் அடிப்படையில் மட்டுமின்றி மிகவும் அருவருப்பாக உள்ளன. இதுபோன்ற காட்சிகளை சமுதாயம் பார்க்க வேண்டுமா என்று தோன்றுகிறது.

நிறைய பேர் இதை பார்க்க வேண்டும் என்பதற்காக இதுபோல் தயாரிக்கிறார்கள். சினிமாத்தனத்துக்காக நிறைய பேரை பயங்கரமாக அடிக்கிறார்கள். அருவருப்பாக இருக்கிறது என்றுதான் சொல்வேனே தவிர கலை அம்சத்துடன் இருப்பதாக சொல்ல முடியாது. இப்படி முதலில் நடந்து இருக்கிறதா? இப்படி காட்ட வேண்டுமா? இதனால் என்ன நன்மை ஏற்படும்?

போலீசை நல்ல முறையில் காட்டினால் நன்மையாக இருக்கும். போலீசாரை மோசமாக, ஜோக்கரைபோல், வில்லனைபோல் காட்டுவது மன வருத்தமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு படத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்குகிறார்கள். அப்போது திரையரங்கில் இருக்கலாமா? வெளியே போய்விடலாமா? என்று தோன்றியது.

பொய்யை கட்டமைத்து மிகைப்படுத்தி காட்டுகிறார்கள். குற்றச்சாட்டு இருந்திருக்கலாம். ஆனால், அது உண்மையா என்று கூட தெரியாமல் பார்க்கும் மக்களுக்கு போலீஸ் என்றால் இப்படிதானா என்ற எண்ணம் வருகிறது. காவல்துறையால் என்ன செய்ய முடியும்? நாங்கள் அரசுக்கு உட்பட்ட ஒரு துறை. பேச்சுரிமை உள்ளது. ஆனால், பொறுப்பு இருக்க வேண்டும். அவர்களுக்கும் அக்கா, தங்கச்சி இருப்பார்கள்.

இவ்வளவு நன்மை செய்த காவல்துறைக்கு கலங்கம் ஏற்படுகிறது. சூர்யாவின் காக்க காக்க, சிங்கம் படங்கள் எனக்கு பிடிக்கும். ஆனால், சாமி படத்தில் வரும் விக்ரமின் கேரக்டர்தான் எனக்கு மிகவும் பிடித்தது. காவல்துறையில் குறைகள் இருக்கிறதுதான். காவல்நிலையங்களிலேயே உயிரிழக்கிறார்கள். ஒரு சிலர் இயற்கையாகவே மாரடைப்பு ஏற்பட்டே இறக்கிறார்கள்.

நான் டிஜிபியாக இருக்கும்போது திருச்சியில் இருந்து ஒருவர் வருகிறார். மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே இறந்துவிட்டார். அதை 2, 3 பேர் காவல் ஆய்வாளர் அடித்துவிட்டார். காவல் நிலைய மரணமாக இதை கருத்தில்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். அவரது மகனே அவ்வாறு பொய் சொல்ல மறுத்துவிட்டார்.

மனு கொடுக்க செல்லும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்றே சொன்னார். அவர் அப்படி சொல்லாவிட்டால் இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு பதிவாகி இருக்கும். எதிர்க்கட்சிகள் குற்ற சம்பவங்களை ஊதி பெரிதாக்கி காவல் நிலைய மரணமாக்குவார்கள். காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா இருக்கிறது. இதை மீறி ஏதும் நடக்கக்கூடாது என்று கவனமாக இருப்போம்.

ஒவ்வொரு நாளும் கைதிகளின் உடல்நிலை குறித்து போலீசார் தகவல் தெரிவிப்பார்கள். மிகப்பெரிய அளவில் இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 30 வரை காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற சாதனையை படைத்தோம். என்னுடைய 36 ஆண்டுகால அனுபவத்தில் காவலர்கள் பெரும்பாலும் மக்களிடம் நியாயமாக நடந்துகொள்கிறார்கள்.

ஏதாவது ஒரு சில இடத்தில் சில தவறுகள் நடக்கின்றன. அதற்கு அந்த நபரும் தூண்டி இருக்கலாம். போலீஸ் நிலையங்களுக்கு வந்தே கலாட்டா செய்வார்கள். இப்போது காவல்துறையில் இருப்பவர்கள் பலர் பொறியியல் பட்டதாரிகள். எல்லோரும் டிகிரி முடித்துள்ளார்கள். நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. இன்னும் சில மாற்றங்கள் வர வேண்டும். குறைகளை கலைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+