"தடா ரஹீம்" ஒரே போடு.. "ஒருவேளை, அந்த சாமியார் மாதிரி நான் பேசியிருந்தா? இந்நேரம் எனக்கு ஜெயிலுதான்"
சென்னை: "அந்த சாமியார் மாதிரி நான் பேசியிருந்தால், இந்நேரம் போலீஸ்காரர்கள் என் மேல கேஸ் போட்டிருப்பாங்க" என்று இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக தரப்பு எதிர்வினையாற்றி வருகிறது.. இதனால், உதயநிதி ஸ்டாலின் மீது சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர், டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் மூத்த தலைவர்கள் குழு எதிர்ப்பு கடிதத்தையும் அனுப்பியிருக்கிறார்கள்.
10 கோடி ரூபாய்: இதனிடையே, உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் என்ற உத்தரபிரதேச சாமியார் விவகாரமும் வெடித்து கிளம்பி உள்ளது. இதனால், சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.. சம்பந்தப்பட்ட சாமியாரின் உருவப்படத்தையும் கொளுத்தி ஆர்ப்பாட்டங்கள், தமிழகத்தில் வெடித்து கிளம்பி உள்ளன.
இந்நிலையில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்த சாமியார் பரமஹம்சாவை கைது செய்ய வேண்டும் என்றும், இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, சாமியார் மீது புகாரும் தந்துள்ளது. இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இந்த புகாரை தந்தார்.
சனாதனம்: பிறகு, செய்தியாளர்களையும் தடா ரஹீம் சந்தித்துபேசினார்... அப்போது அவர் சொன்னபோது, "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய கருத்தில், எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த உடன்பாடும் கிடையாது.. மதத்தினரை புண்படுத்தும் நோக்கில் பேசி இருந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... அதைவிட்டுவிட்ட, உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சாமியார் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
ஒரு அமைச்சரின் தலைக்கு 10 கோடி ரூபாய் தருவதாக சொன்ன சாமியாரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசோ, அம்மாநில அரசோ, காவல்துறையோ இதுவரை எடுக்கவில்லை. மாறாக, சாமியாரின் கையில் தான் சட்டம் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது..
ஒருவேளை, அந்த சாமியார் மாதிரியே, நான் பேசியிருந்தால், இந்நேரம் என்ஐஏவோ அல்லது காவல்துறையினரோ வழக்குப்போட்டு என்னை கைது செய்திருப்பார்கள்.. சாமியாரின் இந்த அறிவிப்பிற்கு என்ஐஏ தலையிட்டு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
புது ரூபாய் நோட்டு: இறையாண்மையை கெடுக்கும் நோக்கில் பேசியிருக்கும், பரமஹம்சாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்... அதேபோல, "இந்தியா" என்ற வார்த்தையே நன்றாக இருக்கிறது.. அப்படின்னா, ரூபாய் நோட்டில் உள்ள இந்தியாவை மாற்றி, புது நோட்டை அச்சடித்து வெளியிடுவார்களா? என்று தடா ரஹீம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications