ஜாக்கிரதை..ஜாக்கிரதை! முஸ்லீம் இளைஞர்களே கண்டிப்பாக ’இதை’ செய்யாதீர்கள்! தடா ரஹீம் கொடுத்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் ஜமேஷா முபினின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ஸை வைத்து பாஜக அண்ணாமலை அவர் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட முயற்சித்ததாக குற்றம் சாட்டிய நிலையில், முஸ்லீம் இளைஞர்களுக்கு தடா ரஹீம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிறன்று அதிகாலை கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது.

கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலணாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது.

அண்ணாமலை

அண்ணாமலை

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை முன்வைத்து இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"கிட்டத்தட்ட 55 கிலோ அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்யூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளனர். இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை.

தற்கொலைப்படை தாக்குதல்

தற்கொலைப்படை தாக்குதல்

கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல். இரண்டு தினங்களுக்கு முன், காரை ஓட்டி இறந்த ஜமேசா முபின் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மாற்றியுள்ளார். என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் முன்பு நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள் என் குற்றங்களை மறந்துவிடுங்கள் என் இறுதிச்சடங்கில் பங்கேறுங்கள், எனக்காக வழிபாடு செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இது ஐஎஸ்ஐஎஸ் படையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்" என்று கூறியிருந்தார்.

 தடா ஜெ ராகீம்

தடா ஜெ ராகீம்

இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சை தொடர்ந்து தேசிய லீக் கட்சி தலைவர் தடா ஜெ ராகீம் முஸ்லீம் இளைஞர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறார். இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர்,"முஸ்லிம் இளைஞர்களே ஜாக்கிரதை ஜாக்கிரதை ஜாக்கிரதை. என்றாவது ஒரு நாள் எனது மரண செய்தி உங்கள் காதுகளுக்கு எட்டினால் எனக்காக துவா செய்யவும். மரணத்தை கண்டு அஞ்சுபவன் இல்லை முஸ்லிம் மரணம் என்பது ஒரே ஒருமுறை தான் அது வள்ளல் நபி வழியிலே அமையட்டும்

ஸ்டேட்டஸ் வைக்காதீங்க..

ஸ்டேட்டஸ் வைக்காதீங்க..

போன்ற வாசகங்களை வாட்ஸ்அப் பேஸ்புக் போன்ற சமூக வளைய தளத்தில் ஸ்டேட்டஸ் வைக்கவோ பதிவாகவோ போடாதீங்க .. பாஜக தலைவர் அண்ணாமலை போன்ற மனநலம் பாதிக்கப்பட்ட நிறைய குழப்பவாதிகளை ஆர்எஸ்எஸ் பாஜக பிராமண சங்கிகள் உருவாக்கி உள்ளனர்.. அவீங்க அதை விபத்தை கூட தற்கொலை நடத்தும் பயங்கரவாதி என பேட்டி கொடுத்து கைது செய்ய சொல்லுவாங்க .. ஜாக்கிரதை ஜாக்கிரதை ஜாக்கிரதை" என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+