ஆதவ் அர்ஜுனா மீது ஆக்சன் எடுங்கள்.. கோர்ட் பார்த்துகிட்டு சும்மா இருக்காது.. நீதிபதி அதிரடி உத்தரவு
சென்னை: ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி எம். ஜோதிராமன் விசாரித்து வருகிறார்.
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை
இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பித்தது. அதில், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுங்கள் . ஆதவ் அர்ஜுனா போட்ட பதிவு குறித்து விசாரிக்க வேண்டும். அதன் பின்புலத்தை விசாரிக்க வேண்டும். எதன் அடிப்படையில் போஸ்ட் செய்யப்பட்டது. இவர்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட பூர்வமாக அவர் மீது ஆக்சன் எடுங்கள். ஏன் கருணை காட்டுகிறீர்கள். அவர் மீது ஆக்சன் எடுங்கள். ஒரு சின்ன வார்த்தை பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். நீதிமன்றம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. தேவையான நேரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவிற்காக காத்து இருக்காதீர்கள். நீங்களே நடவடிக்கை எடுங்கள். அவர் புரட்சி ஏற்படுத்தும் விதமாக போஸ்ட் செய்துள்ளார். எப்படி பார்த்துக்கொண்டு இருந்தீர்கள். பொறுப்பற்ற இது போன்ற பேச்சுக்களை உடனே களைய வேண்டும்.
விஜய்க்கு எதிராக கடும் உத்தரவு
அதேபோல் விஜய் பிரச்சார ஏற்பாட்டாளர்கள் மீது கருணை காட்டாதீர்கள். வழக்கு பதிவு செய்க,. நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச சமூக பொறுப்பைக் கூட தவெகவினர் பின்பற்றவில்லை.என்ன மாதிரியான கட்சி இது? கரூர் துயரத்துக்கு தவெக வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. இது அக்கட்சித் தலைவரின் மனநிலையை காட்டுகிறது. கரூர் துயரத்தில் அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் இருந்தபோது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மொத்தமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
விஜய்க்கு தலைமைப்பண்பே இல்லை. அவரை பின்தொடர்ந்து வந்தவர்களை அவர்கள் அப்படியே விட்டுவிட்டனர். கரூரில் நடந்தது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு.. சம்பவம் நடந்தவுடன் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் தப்பி ஓடிவிட்டனர். அந்த வீடியோக்களை பார்த்து வேதனை அடைந்தோம், என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசு ஆதவ் அர்ஜூனா டெலிட் செய்யப்பட்ட போஸ்டை காட்டிய நிலையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தமிழக அரசு வாதம்
இதில் தமிழக அரசு வைத்த வாதத்தில், போதிய ஏற்பாடுகளை செய்யாமல் மக்களை அழைத்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் வந்தார்கள். பிரச்சனை என்றதும் அப்படியே தலைமறைவாகி மறந்துவிட்டனர். நாங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளோம். விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் யார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. முழு விஷயங்களும் இந்த இரண்டு மனுதாரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவை. புஸ்ஸி, நிர்மல் குமார்தான் இதை ஏற்பாடு செய்தனர். நாங்கள் பொருட்களைச் சேகரித்து வருகிறோம். மரணத்திற்கு அவர்கள் என்ன பங்கு வகித்தனர் என்பது கேள்வி.
விஜய் நிறைய முறை விதிமீறல்களை செய்துள்ளார். மதியம் 12 மணிக்கு கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி இன்றி ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏற்பாட்டாளர்களால் கும்பல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு திருப்பி விடப்பட்டது. மேலும் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக கூடாது என்பதால் விஜயின் ரோடு ஷோவை நாங்கள் தடுக்கவில்லை. கூட்ட நெரிசல் ஏற்படும் என்று நாங்கள் திட்டமிட முடியாது. கூட்டத்தை அமைதிப்படுத்த மனுதாரரிடமிருந்து ஒரு அறிவிப்பு கூட இல்லை. கூட்ட நெரிசலின் போது அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள்? அவர்கள் முறையாக நடந்து கொள்ள ஏதாவது பொது அறிவிப்பு வெளியிட்டார்களா? இல்லை., என்று அரசு தரப்பு கூறி உள்ளது.
-
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே!












Click it and Unblock the Notifications