ஆளுநர் உயிருக்கு ஆபத்து.. திமுக அரசு மீது ஆக்சன் எடுங்க! டெல்லி வரை போன அதிமுக.. பிரதமரிடம் பரபர மனு
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் மனு அளித்துள்ளது. திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ரவி நேற்று முதல்நாள் சிதம்பரத்தில் தருமபுரம் ஆதீனத்தில் ஞானரதத்தை துவக்கி வைக்க சென்ற போது அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டப்பட்டது.
ஆளுநரின் இந்த பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தது. அதோடு அவருக்கு எதிராக மயிலாடுதுறையில் திமுக கூட்டணி கட்சிகளும், திவிக, திகவும் கடுமையாக போராட்டம் செய்தன.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் ஆளுநர் கான்வாய் மீது கல் வீச்சு நடைபெற்றதாக பரபரப்பு புகார் எழுந்தது. அதே சமயம் ஆளுநர் கான்வாயில் கடைசியில் வந்த மூன்று வாகனங்கள் மீது கருப்பு கொடிகள் வீசப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் தமிழ்நாடு போலீஸ் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. போலீசார் அங்கு இருந்ததால் கல் வீச்சு சம்பவம் தடுக்கப்பட்டது என்று போலீசார் விளக்கம் அளித்தனர். இந்த விவகாரத்தை பாஜக கடுமையாக எதிர்த்துள்ளது.

அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இது பற்றி கூறுகையில், ஆளுநரின் கார் மீது கல்லை வீசி உள்ளனர். கொடி கம்பத்தை வீசி தாக்கி உள்ளனர். ஆளுநர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். ஆளுநரிடம் ஸ்டாலின் இன்றே மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத போகிறேன் என்று குறிப்பிட்டார். இதை அதிமுகவும் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து இருந்தது.

அதிமுக விமர்சனம்
ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி நேற்று சட்டசபையில் இருந்து அதிமுக பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் மனு அளித்துள்ளது. திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளது.

கடிதம்
அதிமுக சட்டக்குழு உறுப்பினர் பாபு முருகவேல் சார்பாக இந்த மனு அனுப்பப்பட்டுள்ளது. மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்த புகார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 4 பக்கங்களுக்கு இந்த புகார் எழுதப்பட்டு உள்ளது. ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது.

மனுவில் என்ன உள்ளது?
அதோடு சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. போலீசார் சுதந்திரமாக செயல்படவில்லை. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்று இந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனைகளில் திமுக திறம்பட செயல்படவில்லை. தமிழ்நாட்டின் பாதுகாப்பை திமுக உறுதி செய்யவில்லை.
Recommended Video

நடவடிக்கை வேண்டும்
இதனால் அரசியலமைப்பு சாசன விதிப்படி தமிழ்நாடு அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆளுநர் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதற்கு உதாரணம். இதில் உடனடியாக திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சாசன விதிப்படி திமுக மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications