₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்
சென்னை: சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் அல்லது ஒரு அழகிய வீடு கட்ட வேண்டும் என்பது நடுத்தர வர்க்க மக்களின் மிகப்பெரிய கனவாகும்.. இதற்காக வங்கிகளில் கடன் வாங்கச் சென்றால், வட்டி விகிதத்தைக் கேட்டே பலரும் பின்வாங்கி விடுகிறார்கள்.. ஆனால், அரசு வழங்கும் மானியக் கடன்கள் (Subsidy Loans) பற்றி தெரிந்தால், வாங்கிய கடனில் ஒரு பகுதியை திரும்ப செலுத்த தேவையில்லை என்பது பலருக்கு தெரியாத ரகசியமாகவே இருக்கிறது.. குறிப்பாக கூட்டுறவு வங்கிகளில் கிடைக்கும் சில திட்டங்கள் சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
இன்றைய சூழலில் ஒரு தொழில் தொடங்க 10 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அரசு மானியமாக வழங்கினால், நீங்கள் வாங்கிய அசல் தொகையில் ஒரு பகுதியைத் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.

கூட்டுறவு வங்கிகள் வரிச்சலுகைகள்
இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு துறைகளுக்கு இத்தகைய சலுகைகளை வாரி வழங்குகின்றன.. குறிப்பாக பால் பண்ணை அமைப்பவர்கள், சிறு தொழில் தொடங்குபவர்கள் மற்றும் முதல் முறையாக வீடு கட்டுபவர்களுக்கு இந்த மானியத் திட்டங்கள் அதிக லாபத்தைத் தருகின்றன..
பால் பண்ணை தொழில் செய்ய விரும்புபவர்களுக்குக் கூட்டுறவு வங்கிகள் மூலம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.. மாடுகள் வாங்குவது, கொட்டகை அமைப்பது போன்றவற்றுக்குக் கடன் கிடைக்கும் அதே வேளையில், அதில் கணிசமான தொகை மானியமாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது.. அதேபோல, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) தொடங்குபவர்களுக்கு இயந்திரங்கள் வாங்கவும், இட வசதி செய்யவும் அரசு நிதி உதவி செய்கிறது.. இந்தத் திட்டங்களின் கீழ் கடன் பெறும்போது, நாம் கட்ட வேண்டிய வட்டி குறைய வாய்ப்புள்ளது..
வட்டி மானியம் - கடன் சலுகை
வீடு கட்டும் கனவில் இருப்பவர்களுக்கும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் போன்ற பல திட்டங்கள் மூலம் வட்டி மானியம் கிடைக்கிறது.. நீங்கள் வாங்கும் கடனுக்கான வட்டியில் ஒரு பகுதியை அரசே ஏற்றுக் கொள்வதால், மாதத் தவணை பெருமளவு குறைகிறது.
இது ஒரு சாதாரண குடும்பத்திற்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய நிம்மதியைத் தருகிறது.. பலருக்கும் இந்தச் சலுகைகள் எப்படிப் பெறுவது என்று தெரிவதில்லை.. நேரடியாகக் கூட்டுறவு வங்கிகளை அணுகி, அந்தந்த நேரங்களில் செயல்பாட்டில் இருக்கும் மானியத் திட்டங்கள் குறித்துக் கேட்டாலே இதற்கான முழு விவரங்களையும் பெற முடியும்..
சேமிப்பு திட்டங்கள்
கடன் என்பது சுமை என்று நினைப்பவர்கள், இத்தகைய மானியத் திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், அந்தப் பணமே அவர்களுக்கு ஒரு முதலீடாக மாறிவிடும்.. வாங்கிய பணத்திலேயே ஒரு பகுதி நமக்குச் சேமிப்பாகக் கிடைக்கிறது என்றால், அதைவிட சிறந்த லாபம் வேறு எதுவுமில்லை.
அதனால முறையான ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிகளை அணுகினால், அரசு தரும் இந்த 'ஃப்ரீ' பணத்தைச் சலுகையாகப் பெற்றுப் பயனடையலாம்.. உழைக்க தயாராக இருப்பவர்களுக்கு இந்த மானியக் கடன்கள் ஒரு ஏணியாக இருக்கும் என்பதுதான் இதன் சூப்பரான விஷயம்..!!!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications