அதிமுகவுடன் கூட்டணி பற்றி பேசவேயில்லை... அதிரடி பல்டியடித்த தமாகா
சென்னை:அதிமுகவிடம் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமகவுக்கு 7 சீட், ஒரு மாநிலங்களவை எம்பி பதவி, பாஜவுக்கு 5 இடங்கள் ஒதுக்குவதற்கான ஒப்பந்தம், சென்னையில் ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் கையெழுத்தானது.

உடன்பாட்டில் ராமதாஸ் மகிழ்ச்சி அடைந்துள்ளாலும்... அவரது இந்த கூட்டணி முடிவு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தேமுதிகவுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
அதே நேரத்தில் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந் நிலையில் அதிமுக கூட்டணியில் தமாகாவும் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் அடிப்படையில் இந்த இரு கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும்... சென்னையில் அமைச்சர் தங்கமணியுடன் தமாகா பொது செயலாளர் விடியல் சேகர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை திட்டவட்டமாக தமாகா மறுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் கட்சியின் தலைவர் ஜிகே வாசனுக்கு மட்டும் தான் உள்ளது. எனவே... பேச்சுவார்த்தையில் தாம் ஈடுபட்டு வருவதாக செய்தி வருவது உண்மைக்கு புறம்பானது.
தமாகா தலைவர் என்னை யாரிடமும் கூட்டணி குறித்து பேச சொல்லவில்லை. எனவே, அதிமுக கூட்டணி குறித்து நான் பேசியதாக வெளி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications