தாம்பரத்தில் "விழுந்த" நற்செய்தி..இனி சல்லுனு போகலாம்.. தெற்கு ரயில்வே மாஸ்.. திக்குமுக்காடிய மக்கள்
சென்னை: சென்ட்ரல், எழும்பூர் ரயில் முனையங்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால்தான், தென் சென்னையில் குறிப்பாக தாம்பரம் மூன்றாவது ரயில் முனையமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணிநிமித்தம், கல்வி, உட்பட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கம்.. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் வசித்து வசித்து வருகின்றனர்.

வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்..
விடுமுறை நாட்கள்: இதுபோன்ற சமயங்களில் பஸ்கள், ரயில்கள் என எல்லா இடங்களிலும் நெரிசல் காணப்படும். இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகமும், தெற்கு ரயில்வேயும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றன.. ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும், சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகின்றன.. அந்த வகையில், இந்த முறையும் ஸ்பெஷல் அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
முக்கிய விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவரும் நிலையில், சமயம் சிறப்பு ரயில்கள் பயணிகளின் வசதிக்காக அடிக்கடி நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அறிவிப்பு: இதுகுறித்து தெற்கு ரெயில்வே ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது, "பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்க்க, நாகர்கோவிலில் இருந்து வரும் 13-ந்தேதி, 20-ந்தேதி, 27-ந்தேதி மற்றும் செப்டம்பர் 3-ந்தேதி, 10-ந்தேதிகளில் மாலை 4.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06012) அடுத்தநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இதேபோல, மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து வரும் 14-ந்தேதி, 21-ந்தேதி, 28-ந்தேதி மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி, 11-ந்தேதிகளில் காலை 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06011) அதே நாள் இரவு 10.55 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்" என்று தெரிவித்திருக்கிறது.
பயங்கர குஷி: தினமும் 3 லட்சம் பயணிகள் தாம்பரம் ஸ்டேஷனுக்கு வந்துபோகும் நிலையில், தென்னக ரயில்வே அறிவித்துள்ள இந்த தகவல், மிகுந்த பூரிப்பையும் மகிழ்ச்சியையும் சென்னைவாசிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications