Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் டூ நாகர்கோவில் சிறப்பு ரயில்.. தீபாவளிக்கு ஊருக்கு போகனுமா? இன்று முன்பதிவு தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் இடையூறு இன்றி பயணிக்க வசதியாக கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் தாம்பரத்திலிருந்து நாகா்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தெற்கு ரயில்வே சாா்பில் நேற்று இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது, "நாகா்கோவிலில் இருந்து நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக் கிழமை தோறும்) மாலை 4.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06012) மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து நவ.6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை தோறும்) காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06011) இரவு 8.45 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.

Tambaram to Nagercoil Diwali special trains pre booking starts today morning

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (அக்.2) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், ஆயுத பூஜை, புத்தாண்டு போன்ற விடுமுறை காலங்களில் தமிழ்நாட்டில் பெருநகரங்களில் பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள் சொந்த ஊர்களுக்கு பெருமளவில் செல்வது வழக்கம்.

அப்போது வாகனங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும். போக்குவரத்து நெரிசலும் கடுமையாக இருக்கும். இதனை தவிர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் இந்த பண்டிகைகளுக்காக சிறப்பு பேருந்துகளும், ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இதற்கான முன்பதிவு சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜூலை மாதமே முன்பதிவை தொடங்கி இருக்கிறது ரயில்வே.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9 மற்றும் நவம்பர் 10 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்த ரயில்வே நிர்வாகம், அன்றே முன்பதிவை தொடங்கியது. ரயில்வேயின் https://www.irctc.co.in/ என்ற இணையதளத்திலும் அனைத்து ரயில் நிலைய கவுண்டர்களிலும் டிக்கெட்டுகளை பெறலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில் சென்னை - நாகர்கோயில் இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று தற்போது முன்பதிவு தொடங்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+