தாம்பரம் அருகே காலையில் தூங்கி கொண்டிருந்த கணவன்.. கொஞ்சம் கூட யோசிக்காமல்... மனைவி செய்த காரியம்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. தாம்பரம் அருகே உள்ள ஒரக்கடத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தினர் மட்டுமின்றி, வடமாநிலத்தவர்களும் பலர் பணியாற்றுகிறார்கள். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் இம்ரான் சையத் குடும்பத்துடன் தங்கி, பணியாற்றி வருகிறார். இம்ரான் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தாராம். இதனால் கோபம் அடைந்த மனைவி என்ன செய்தார் தெரியுமா? விரிவாக பார்ப்போம்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரக்கடம், ஸ்ரீபெரும்புதூர் தாம்பரத்திற்கு நடுவில் உள்ள நகரம் ஆகும். தாம்பரத்தில் இருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கிறது.இங்கு முக்கியமான பொருளாதார மண்டலமாக ஒரக்கடம் இருக்கிறது. இதுதான் சென்னையின் முக்கியமாக தொழில் மண்டங்களில் ஒன்றாக இருக்கிறது. ஒரக்கடம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு லட்சக்கணக்கான மக்கள்வேலை செய்கிறார்கள். தமிழ்நாட்டினர் மட்டுமின்றி வெளிமாநிலத்தவர் பலரும் வேலை செய்கிறார்கள்.

அந்த வகையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 31 வயதாகும் இம்ரான் சையத் மற்றும் அவருடைய மனைவி பரிதாபேகம் (31) ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் வசித்து வந்தார்கள். அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் காலை இம்ரான் சையத் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது பரிதாபேகம் காய் வெட்டும் 2 கத்திகளால் மாறி மாறி அவரது வயிறு, உடல், தலை பகுதியில் குத்தினாராம்.
இதில் இம்ரான் சையத் படுகாயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் இது குறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இம்ரான் சையத்தை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பரிதா பேகத்துக்கு ஏற்கனவே இக்பால் என்பவருடன் திருமணம் நடந்து பின்னர் பிரிந்து இருந்த நிலையில் இம்ரான் சையத்துடன் 2 ஆண்டுகளாக வாழ்ந்து வந்து வந்தாராம். இந்த நிலையில் இம்ரான் சையத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது பரிதா பேகத்துக்கு தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக பலமுறை இம்ரான் சையத்தை பரிதாபேகம் கண்டித்து வந்ததாகவும், அதை கேட்க மறுத்ததால் காய்கறி வெட்டும் கத்திகளால் குத்தியது போலீஸ் விசாரணையில் கூறியிருக்கிறார்.இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இம்ரான் சையத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ஒரகடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பரிதாபேகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications