அப்படிப் போடு.. சீமானுக்கு கிடைத்த 'பூஸ்ட்'.. தமிழ்த் தேசிய கிறித்தவர் இயக்கம் ஆதரவு
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த் தேசிய கிறித்தவர் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
Recommended Video
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தி இருப்பது தான்.

பெண்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதில் நாம் தமிழர் கட்சிக்கு பெருமை கிடைத்தாலும், வெற்றி எனும் அளவில் பார்க்கும் போது, இந்த முயற்சி சாத்தியமா? என்பதே கேள்வி. வெற்றிப் பெறும் வேட்பாளர்களுக்கே கட்சிகள் சீட் கொடுக்க முன்வரும். ஆனால், நாம் தமிழர் வேறு வியூகத்தை வாக்காளர்களை நம்பி கையில் எடுத்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் களம் காண்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று முன்பு அறிவித்த சீமான், பின் திருவொற்றியூரை தேர்வு செய்தார்.

எனினும், இவை அனைத்தையும் மறந்து சீமான் உட்பட வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான தொகுதிகளில் திமுக, அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது நாதக. வெற்றி என்பது எந்தளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி இருந்தாலும், சீமானின் நோக்கம் வாக்கு சதவிகிதம் தான். மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளை விட அதிக வாக்கு சதவிகிதம் பெற்றாலே, அது சீமானை பொறுத்தவரை மாபெரும் வெற்றி தான்.

இந்நிலையில் தான் தமிழ்த் தேசிய கிறித்தவர் இயக்கம் நாம் தமிழர் கட்சிக்கு இன்று தனது ஆதரவளித்தது. இதுகுறித்து அந்த இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கிறித்தவர் இயக்கம் மற்றும் ஷாகின் பாக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள், நாம் தமிழர் கட்சிக்கு முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றன. தமிழர் உரிமையை மீட்கவும், வளங்களை காக்கவும், தமிழகம் மதவாதிகளின் பிடியில் சிக்காமல் தடுக்கவும் சமரசமின்றி போராடி வரும் நாம் தமிழர் கட்சிக்கு துணை நின்று வலிமை சேர்ப்போம்" என்று தெரிவித்துள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications