புயல் சேதம்.. வடியாத வெள்ளம்.. நடிகர் சங்கம் நடத்தும் கலைஞர் 100 நிகழ்ச்சி ஜனவரிக்கு மாற்றம்
சென்னை: தமிழ் திரையுலகம் சார்பாக டிசம்பர் 24 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கலைஞர் 100 நிகழ்ச்சி ஜனவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் காரணமாக நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் திமுக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் 100 என்ற பெயரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகம் சார்பில் வெளியான அறிக்கையில், " திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், கலைஞர் அவர்கள் ஆற்றிய மகத்தான சாதனைகளை அவரது நூற்றாண்டில் கலைஞர்-கலைஞர் 100 எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக வரும் 24.12 .2023 ஞாயிறு அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்த பட்சம் 35000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது. நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம் என்று அறிவிக்கப்பட்டது.
எம்ஜிஆர் நினைவு நாளில் காலைஞர் 100 நிகழ்ச்சி நடத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், தன்னிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பார்களே அதைப்போல இல்லையென்று சொல்லாமல் வாரி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர்.
தன்னுடைய திரைப் படங்கள் மூலம் நல்ல சிந்தனைகளையும், கருத்துள்ள பாடல்களையும் மக்கள் மனதிலே பதிய வைத்து, மக்களை நல்வழிபடுத்திய மாபெரும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர், "எனது இதயக் கனி எம்.ஜி.ஆர்" என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர்.

மக்கள் மனங்களில் நீக்கமற நிலைத்திருக்கும் எம்.ஜி.ஆரின் தன்னலமற்ற தியாகங்களை, சாதனைகளை, பணிகளை கருத்தில் கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மிக்ஜாம் புயல் வெள்ள சேதத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தத்தளிக்கின்றன. இதனையடுத்து வரும் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறுவதாக இருந்த திமுக இளைஞரணி மாநாடு 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே 24 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கலைஞர் 100 நிகழ்ச்சி ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications