மோடி பேச்சு ஒண்ணும் சரியில்ல.. தமாகா மாநில நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்.. ஜிகே வாசனுக்கு ஷாக்!
சென்னை: பிரதமர் மோடியின் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாநில நிர்வாகி கௌதமன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. முதற்கட்டத்திலேயே கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்தது. லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் தமாகா கட்சியில் இருந்து விலகியுள்ளார். கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகள், அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறை எல்லாம் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது என கெளதமன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசி வருவதாகவும், பாஜவின் செயல்பாடுகள் மற்றும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளதாகவும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறி த.மா.காவிலிருந்து மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் விலகியுள்ளார்.
பாஜகவுடன் இணைந்து லோக்சபா தேர்தலைச் சந்தித்தது ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. கடந்த மார்ச் மாதம், தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாட்கள் முன்பாக, இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதாக ஜிகே வாசனும் அண்ணாமலையும் இணைந்து அறிவித்தனர். ஜிகே வாசன், பாஜகவுடன் கூட்டணி அறிவித்ததுமே தமாகா நிர்வாகிகள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
பாஜகவுடன் தமாகா கூட்டணி வைத்ததை கண்டித்து தமாகா தலைமை நிலைய செயலாளராக இருந்த அசோகன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அசோகன், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பாஜக உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா நிர்வாகி கட்சியில் இருந்து விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications