தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்.. சரியும் குணம் அடைவோர் எண்ணிக்கை
சென்னை : தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1544 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1607 பேர் ஒரே நாளில் மீண்டனர். பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அந்த எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவது கவலைக்குரியதாகும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1600 என்கிற நிலையில் உள்ளது. எல்லா மாவட்டங்களிலுமே பாதிப்பு குறைந்துள்ளது என்றாலும், கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிப்பு பெரிய அளவில் மாறவில்லை. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 4ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,25,778 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு
அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,576 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,74,518 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு எவ்வளவு
தமிழகத்தில் கொரோனா காரணமாக செப்டம்பர் 7ம் தேதி மாலை நிலவரப்படி 19 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,055 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து 16 ஆயிரத்திற்கு சரிந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணக்கை 16,256ல் இருந்து 16,205 ஆக சரிந்தது. கொரோனா பாதிப்பு சிறிய அளவில் உயர்ந்து வருவதால் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை உயராத வரை பிரச்சனை பெரிய அளவில் இல்லை என்றே மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். எனினும் சில நாட்களில் இந்தநிலை மாறலாம் என்ற அச்சமும் உள்ளது.

எவ்வளவு
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 217 பேரும், சென்னையில் 194 பேரும், ஈரோட்டில் 115 பேரும், திருவள்ளூரில் 69 பேரும், தஞ்சாவூரில் 53 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 2191 பேர் உள்ளனர். அதை தொடர்ந்து சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.












Click it and Unblock the Notifications