ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. முதல் நாளே கலக்கிய தமிழ்நாடு அரசு.. பூரித்து போன பெண்கள்
சென்னை: மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே இந்த பணிகள் சிறப்பாக நடந்தன.
கலைஞர் உரிமைத் தொகையை பெற விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதற்கான முகாம்கள் 24ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது. இந்த முகாமில் கூட்டத்தை தவிர்க்க டோக்கன் வழங்கப்படுகிறது.
இந்த டோக்கன் மிக முக்கியம் ஆகும். அதில் உங்களிடம் கொடுக்கப்படும் அப்ளிகேஷனில் நம்பர் இருக்கும். அதோடு சேர்ந்து டோக்கன் ஒன்று வழங்கப்படுகிறது அதில் ஒரு நம்பர் இருக்கும். இதுதான் டோக்கன் நம்பர் ஆகும். மேலும் டோக்கனில் உங்கள் பெயர் இருக்கும்.

பின்னர் நீங்கள் ரேஷன் கடைக்கு அல்லது முகாமிற்கு எந்த நாளில், எந்த நேரம் செல்ல வேண்டும் என்று நேரம் கொடுக்கப்பட்டு இருக்கும். எந்த முகாமிற்கு செல்ல வேண்டும் என்றும் விவரங்கள் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த முகாமிற்கு குறிப்பிட்ட தேதியில் டோக்கனுடன் செல்ல வேண்டும்.
உடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எடுத்து செல்ல வேண்டும். அதோடு தேவையான ஆவணங்கள், ஆதார் இணைக்கப்பட்ட போன், ஆதார் கார்டு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
இதற்காக வழங்கப்படும் விண்ணப்பத்தில் பல்வேறு அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளது. அதாவது பெயர், போன் எண், ஆதார் எண், படிப்பு, வருமானம் என்று பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளன. இன்னொரு பக்கம் இதனுடன் டோக்கன் ஒன்று வழங்கப்படுகிறது.
அதிரடி: மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே இந்த பணிகள் சிறப்பாக நடந்தன. முதல் நாளிலேயே அதிகாலை முதல் ரேஷன் ஊழியர்கள் வீடு வீடாக சென்றனர்.
200 வார்டுகளில் 98 வார்டுகளுக்கு ரேஷன் ஊழியர்கள் சென்றனர். இதில் 50 சதவிகித வீடுகள் 98 வார்டுகளில் கவர் செய்யப்பட்டன. ஏற்கனவே அரசு எடுத்துள்ள லிஸ்ட் அடிப்படையில் பயனாளர்கள் ஆக குறைந்தபட்ச தகுதி கொண்டவர்கள், அந்த தகுதி உள்ளவர்களாக கருதப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று ரேஷன் கடை ஊழியர்கள் பலர் அந்த நேரத்தில் கடையை திறந்துவிட்டு மற்ற நேரத்தில் வேலை நேரம் முடித்த பின்பும் கூட இரவு வரை விடாமல் விண்ணப்பங்களை கொடுத்து அசத்தினர். இதனால் முதல் நாள் விண்ணப்ப விநியோகத்தில் எந்த தவறும் நடக்கவில்லை.
முகாம்கள்: இந்த டோக்கன்கள் வழங்கப்பட்ட பின் சென்னையில் இதற்காக வரும் 24ம் தேதி முதல் முகாம்கள் தொடங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 650 ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்பட உள்ளன. முதல் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முடியும். இரண்டாம் கட்ட முகாம் உடனடியாக தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடக்கும். இரண்டு கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்படும்.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 3 -4 கடைகளுக்கு ஒரு முகாம் என்று 250 முகாம்கள் முதல் கட்டமாக அமைக்கப்படும். அதன்பின் இரண்டு, மூன்று கட்டங்களில் மற்ற ரேஷன் கடைகளுக்கு முகாம்கள் அமைக்கப்படும்.
இந்த முகாம்களில் தினமும் 80 முதல் 100 டோக்கன்கள் கொண்ட மக்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வாங்கப்படும்.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு!












Click it and Unblock the Notifications