Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அருமையான முன்னேற்றம்.. வெகுவாக குறைந்த ஆக்டிவ் கேஸ்கள் .. தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் அக்டோபர் 17ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1411 பேர் ஒரே நாளில் மீண்டனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 15,022 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 14814 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1200 என்கிற நிலையில் உள்ளது. கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் அக்டோபர் 17 ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 26,87,092 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,411 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26,36,379 ஆக உயர்ந்துள்ளது.

 உயிரிழப்பு எவ்வளவு

உயிரிழப்பு எவ்வளவு

தமிழகத்தில் கொரோனா காரணமாக அக்டோபர் 17ம் தேதி மாலை நிலவரப்படி 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,899 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது

சரிந்தது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நீண்ட நாளைக்கு பிறகு 14 ஆயிரம் ஆக குறைந்து உள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 15,022 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 14814 ஆக குறைந்துள்ளது. . அதாவது நேற்றைவிட இன்று ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கோவையில் பாதிப்பு

கோவையில் பாதிப்பு

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 156 பேரும், கோவையில் 132 பேரும், செங்கல்பட்டில் 88 பேரும், ஈரோட்டில் 90 பேரும், திருப்பூரில் 73 பேரும், சேலத்தில் 56பேரும், திருவள்ளூரில் 55 பேரும், தஞ்சாவூரில் 68 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் 1794 ஆகவும், கோவையில் 1552ஆகவும், ஈரோட்டில் 906 ஆகவும், செங்கல்பட்டில் 1088 ஆகவும் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+