தமிழ்நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 11 பேர் மரணம்.. 805 பேருக்கு தொற்று உறுதி
சென்னை : தமிழகத்தில் நவம்பர் 14 ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 929 பேர் ஒரே நாளில் மீண்டனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 9,751
ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 9,616 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 800 என்கிற நிலையில் உள்ளது. கோவை சென்னையில் மட்டும் பாதிப்பு தினசரி 100 என்கிற அளவில் உள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் நவம்பர் 14 தேதியான இன்று கொரோனா தொற்றால் 805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 27,14,830 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு
அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 929 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26,68,930 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு எவ்வளவு
தமிழகத்தில் கொரோனா காரணமாக நவம்பர் 14 தேதி மாலை நிலவரப்படி ஒரு நாளில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, திருச்சியில் தலா இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36,284 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 ஆயிரம் ஆக குறைந்து உள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 9,751 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 9,616 ஆக குறைந்துள்ளது.

கோவையில் பாதிப்பு
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 128 பேரும், கோவையில் 125 பேரும், செங்கல்பட்டில் 63 பேரும், ஈரோட்டில் 78 பேரும், திருப்பூரில் 48 பேரும், சேலத்தில் 40 பேரும், திருச்சியில் 38 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் 1245 ஆகவும், கோவையில் 1169 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications