சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராமனிடம் 6 மணி நேரம் விசாரணை.. சஸ்பெண்ட் செய்து உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறை ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டு திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதன்பின் ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறை தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட சூழலில், உள்துறை செயலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் தனுஷ் என்பவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த விவகாரத்தில் பெண் குடும்பத்தினர் கூலிப் படை மூலமாக இளைஞர் தனுஷின் தம்பியை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கேவி குப்பம் எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தன.

high court police

கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமனின் அரசு சார்பாக அளிக்கப்பட்ட காரினை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் பெண்ணின் குடும்பத்தினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதன்பின் பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணைக்காக சென்ற போலீசாரை அவரது ஆதரவாளர்கள் 5 மணி நேரமாக தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். வழக்கில் ஆஜராவதற்காக ஏடிஜிபி ஜெயராம் காவல் உடையில் வந்த நிலையில், போலீசார் கைது செய்வதற்கு முன்பாக சாதாரண உடைக்கு மாறினார்.

அதுமட்டுமல்லாமல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் போலீசார் அவரை திருவாலங்காடு காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவரிடம் டிஎஸ்பி தமிழரசி விசாரணையை நடத்தினார். திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடந்த நிலையில், இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரைக்கப்பட்டது. இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை செயலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+