செப் 21 வரை தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்: ஆக.13ல் பொது பட்ஜெட், 14ல் வேளாண் பட்ஜெட்

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். வரும் 13ஆம் தேதி பொது பட்ஜெட்டும்,14ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பிப்ரவரி மாதம் தேர்தலை முன்னிட்டு, இடைக்கால நிதி நிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு முழு நிலை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்.

Tamil Nadu Assembly Budget Session Aug. 13 to Sept 21,2021 - Present separate Budget for agriculture

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து ஆகஸ்ட் 13 இல் தொடங்கும் தமிழக சட்டசபைக் பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13ஆம் தேதி பொது பட்ஜெட் ,14ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொது பட்ஜெட்,வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16ஆம் தேதி தொடங்குகிறது. மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் 21ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்டுவதாகவும் வேளாண் பட்ஜெட் வரும் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதாகவும் கூறினார். பட்ஜெட் மீதான விவாதம் 16ஆம் தேதி முதல் 4 நாட்கள் நடைபெறும் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்குகிறது. 23 நாட்கள் பொது மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் செப்டம்பர் 20ஆம் தேதி காவல்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளிப்பார் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் வேளாண்மைக்கு முதன் முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 14ஆம் தேதி வேளாண்துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+