தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ல் நிறைவு - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி வரைக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டசபை பட்
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி வரைக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒருவாரத்திற்கு முன்னதாகவே நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்தார். 14ஆம் தேதி வேளாண் நிதிநிலைஅறிக்கையை வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த இரு பட்ஜெட்டுகளும் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான பொது விவாதம் கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கார சார விவாதங்கள் சட்டசபையில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை குறைப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டசபை கூட்டத்தொடர் ஒருவாரம் முன்னதாக செப்டம்பர் 13ஆம் தேதியே நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவு பெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என, சபாநாயகர் மு.அப்பாவு சட்டசபையில் அறிவித்தார்.
சட்டசபை முன்கூட்டியே நிறைவடைவதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பல்வேறு துறைகள் மீதான விவாத நாட்கள் இதற்கேற்ப மாற்றியமைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்த முழு விவரம் விரைவில் வெளியாகும்.
பிரியாணி பரிசுப்பொருட்கள் வேண்டாம்
சட்டசபை கூட்டத்தொடரில் சிக்கன நடவடிக்கையாக முதல்முறையாக எம்எல்ஏக்களுக்கு பிரியாணி, பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கும் நடைமுறையை கைவிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அந்தந்த துறைகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது, வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட உயர்தர பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்குவது போன்றவை நடைமுறைகள் கடந்த காலங்களில் இருந்தது.
உயர் ரக சூட்கேஸ்கள், கடிகாரங்கள், ஆவின் பொருட்கள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்படுவது வழக்கம்.
எம்எல்ஏக்கள், தலைமைச் செயலக அதிகாரிகள், காவல் துறையினர் என ஒரு நாளைக்கு சுமார் 1,000 பேருக்கு உணவு வழங்குவதற்காக அந்தந்த அரசுத்துறையிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு செலவு செய்வதற்கு அரசுத்துறைகளின் பட்ஜெட்டில் எந்த அனுமதியும் கிடையாது.
இந்நிலையில், முதல்முறையாக சிக்கனத்தை கடைப்பிடிக்கும் விதமாக, இந்த நடைமுறையை கைவிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தந்த துறைத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications