ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி!
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் 'ஹீரோவான' தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் முக்கிய போட்டியாளர்களாக களமிறங்குகின்றன. இவை தவிர நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிட உள்ளன.
2026 சட்டசபை தேர்தல்
இதனால் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பல முக்கிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 4 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணி
மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகளும், தேமுதிக கட்சிக்கு 10 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 164 பேர் அடங்கிய திமுக வேட்பாளர் பட்டியலை நேற்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை
இந்த முறை திமுக தேர்தல் அறிக்கையில் பொதுமக்களை கவரும் வகையில் பல புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது.. குறிப்பாக மக்கள் நலனை மையமாகக் கொண்ட முக்கிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை
இது பெண்களின் நிர்வாக சுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் முக்கியமான அறிவிப்பாக இருக்கும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. பெண்களின் பொருளாதார முன்னேற்றம், சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைவருக்கு மகளிர் உரிமைத் தொகை 2000, 1.15 லட்சம் மாணவர்கள் பயன்படும் வகையில் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு திட்டம், 10 லட்சம் புதிய வீடுகள் கட்டி தரப்படும், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் ஊக்கத்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும், முதியோர் உதவித்தொகை ரூ.1200லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக வாக்குறுதிகள்
அதிமுக ஆட்சி அமைந்தால் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். அதன்படி ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச குளிர்சாதன பெட்டி, குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி மற்றும் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. திமுகவை பொறுத்தாரை அதன் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ என்பார்கள். அதனால் திமுக வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அறிவிப்புகள் இந்த தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications