முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கிட்டை பாதி முடித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கிட்டு பேச்சு வார்த்தை முடிவுக்கு வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் இன்று பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயில் தமிழகம் வந்துள்ளார். இன்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்கும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்துகிறார்

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை பெரும்பாலும் நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில், குறிப்பாக பாஜகவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் நாளை மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது பாஜகவுக்கு தமிழகத்தில் 27 முதல் 29 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக சென்னை நகரில் உள்ள முக்கிய தொகுதிகளான வேளச்சேரி, மயிலாப்பூர் மற்றும் தியாகராய நகர் போன்ற இடங்களை பாஜக கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தொகுதிகள் நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் உள்ள முக்கிய பகுதிகள் என்பதால், இவை குறித்து கடுமையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம், அதிமுக சார்பில் ஏற்கனவே தொகுதி பங்கீட்டிற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்களான கேபி முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு, கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த அரசியல் நகர்வுகளுக்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டது முக்கிய கவனம் பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது கூட்டணியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவுகள் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமகவின் அன்புமணி, அமமுகவின் டிடிவி உள்ளிட்டோரை கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் இன்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications