தமிழக சட்டசபை தேர்தல் எப்போது? மார்ச் மாதம் தேதி அறிவிப்பு வெளியாகிறதா?
சென்னை: தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 10ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திமுக கூட்டணி வென்று ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 10ஆம் தேதி வரையாகும். எனவே அந்த தேதிக்கு முன்னதாகவே தேர்தல் நடத்துவார்கள்.

அந்த வகையில் வரும் சட்டசபை தேர்தலுக்காக தமிழகம், புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. இதனால் அவரது தலைமைப் பண்புக்கே கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கெனவே 11 தேர்தல்களில் தோல்வி அடைந்த அதிமுக, இந்தத் தேர்தலில் 12 ஆவது முறை என்ற பெயரை பெறக் கூடாது என்பதில் முனைப்பு காட்டி வருகிறது. அதிமுகவுடன் இணைந்து எப்படியாவது அமைச்சரவையில் இடம் பெற்றிட வேண்டும் என்று பாஜகவும் போராடி வருகிறது.
ஆனால் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் இந்த முறையும் மக்கள் ஆதரவு திமுகவுக்கே தருவார்கள் என அவர்கள் கணக்கு போட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு நடுவில் நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் என நாம் தமிழர் கட்சியும் தவெகவும் கூறி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சிக்காவது வாக்கு சதவீதம் நல்ல முறையில் இருந்து அக்கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஆனால் தவெகவுக்கு இதுதான் முதல் தேர்தல். அப்படியிருக்கும் போது மாற்றத்தை கொண்டு வருவோம் என எதை வைத்து சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு நடுவே தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முழு வீச்சில் நடந்து முடிந்தன. தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, பிப்ரவரி மாதம் 2ஆம் பாதியில் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு தமிழகம் வருகை தரவுள்ளது. இந்தக் குழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும்.
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச் சாவடிகள் அமைப்பு, வாக்காளருக்கான வசதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
எதுவாக இருந்தாலும் பரீட்சை எப்போதுனு தெரிந்தால்தானே திட்டமிட்டு படிக்க முடியும் என்பதை போல தேர்தல் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருவதால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்
மேலும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்றும் மே மாதத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. பள்ளி மாணவர்களுக்கு முழுவாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications