Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபை வீடியோ பதிவு.. ஆளுநரின் விருந்தினர் மீது பாயும் நடவடிக்கை? உரிமை குழு பரபர ஆலோசனை..அதிரடி

சட்டசபையில் ஆளுநர் ஆர்என் ரவி உரையை செல்போனில் வீடியோ எடுத்த விவகாரம் குறித்து அவை உரிமை குழு இன்று தீவிர ஆலோசனை நடத்தியது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் ஆர்என் ரவி உரையுடன் துவங்கியது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சபை நடவடிக்கைகளை விதிகளை மீறி ஆளுநரின் விருந்தினர் செல்போனில் வீடியோவாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு பிறப்பித்த உத்தரவில் அவை உரிமை குழு இன்று ஒன்றுகூடி சம்பவம் குறித்து பரபரப்பாக விசாரணை நடத்தியது. இதன்மூலம் விரைவில் ஆளுநரின் விருந்தினர் மீது நடவடிக்கை பாயலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த வேளையில் ஆளும் கட்சி சார்பில் அச்சடித்து வழங்கப்படும் உரையை ஆளுநர்கள் படிப்பார்கள்.

இந்த உரையில் ஆளும் அரசு செய்த சாதனைகள், திட்டங்கள், கொண்டு வரப்பட உள்ள திட்டங்கள் சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் தான் 2023ம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 9 ம் தேதி துவங்கியது.

ஆளுநர் உரை சர்ச்சை

ஆளுநர் உரை சர்ச்சை

இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி உரையுடன் இந்த உரை துவங்கியது. உரையின்போது ஆளுநர் ஆர்என் ரவி அரசு சார்பில் அச்சிட்டு வழங்கப்பட்ட உரையில் சில வரிகளை படிக்காமல் தவிர்த்தார். மாறாக கூடுதலாக சில விஷயங்களை அவர் சேர்த்து படித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். ஆளுநர் உரையில் அச்சிட்டு வழங்கப்பட்டவை மட்டுமே இடம்பெற வேண்டும். பிற விஷயங்கள் இடம்பெற கூடாது என தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார். இது பெரும் விவாதத்தை கிளப்பியது.

வீடியோவுக்கு எதிராக தீர்மானம்

வீடியோவுக்கு எதிராக தீர்மானம்

இதற்கிடையே தான் சட்டசபையில் ஆளுநர் ஆர்என் ரவி உரை நிகழ்த்தியபோது விருந்தினர் மாடத்தில் அமர்ந்திருந்த ஒருவர் சபை நடவடிக்கைகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் வீடியோ எடுத்த விவகாரத்தில் உரிமை மீறல் உள்ளது. இதுபற்றி அவை உரிமைக் குழு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 அவை உரிமை குழு கூட்டம்

அவை உரிமை குழு கூட்டம்

இதனை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டார். இதுபற்றி அவர், இந்த பிரச்சனையில் அவை உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால் இதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அவை உரிமை குழுவிற்கு உத்தவிடப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் தான் அவை உரிமை குழு இன்று கூடியது. இந்த குழுவின் தலைவராக துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ள நிலையில் அவரது தலைமையில் இந்த குழு இன்று கூடியது இதில் அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், ஈஸ்வரப்பன், இ கருணாநிதி, சிவகுமார் உள்ளிட்ட 16 உறுப்பினர்கள் உள்ளனர்.

 கூட்டத்தில் விவாதித்தது என்ன?

கூட்டத்தில் விவாதித்தது என்ன?

இருப்பினும் இன்றைய அவை உரிமை மீறல் குழு கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், இனிகோ இருதயராஜ், சவுந்தரபாண்டி, நல்லதம்பி, ஈஸ்வரப்பா, பிரின்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் செல்போனில் வீடியோ எடுத்தது பற்றி விவாதிக்கப்பட்டது. இங்கு எடுக்கும் முடிவுகள் பற்றி அறிக்கை தயார் செய்யப்படும். அதனடிப்படையில் தவறு நிரூபணம் செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+