சட்டசபை இன்று கூடுகிறது.... முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
Recommended Video

சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இந்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றித் தொடங்கி வைக்க உள்ளார். ஆளுநர் ஆங்கில உரையை படித்தபின், பேரவைத்தலைவர் தனபால் தமிழில் படிப்பார். மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரவைத் தலைவர் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், எத்தனை நாள்களுக்கு கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்
பேரவைத் தலைவர் குறிப்பிடும் தேதியிலிருந்து ஆளுநர் உரை மீது பேரவையில் விவாதம் நடைபெறும். மேகதாது, ஸ்டெர்லைட் மற்றும் கஜா புயல் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்ப திட்டமிட்டு வரும் நிலையில், அதனை எதிர்க்கொள்ள அ.தி.மு.க. தரப்பும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, ராமசாமி படையாட்சியர் உருவப் படம் இந்த கூட்டத் தொடரில் பேரவையில் திறந்து வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியது.இக்கூட்டத்தில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications