"உங்களுக்கு என்ன பிரச்சினை.." எடப்பாடி கேட்ட கேள்வி.. அதிமுக எம்எல்ஏக்கள் கடும் அமளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளே ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். 2வது நாளான நேற்று முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்​கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் 3வது நாளாக இன்று சட்டசபை கூட்டத்தொடர் கூடியது. அப்போது கறிக்கோழி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏல்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை இது குறித்து விவாதிக்கலாம் என பதிலளித்தார்.

தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு முன்பு சட்டசபை கூட்டத்தொடர் இப்போது கூடியுள்ளது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் (ஜனவரி 20) கூடியது.. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

tamil nadu assembely tamil nadu dmk

இருப்பினும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் ஒலிக்கப்படாததால் உரையை வாசிக்காமல் ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்.. அத்தோடு ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இருந்ததாகவும் ஆளுநர் பேசும்போது மைக் அணைக்கப்பட்டதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ஆளுநரை உரையை அவர் வாசித்ததாகக் கருதப்படும் எனச் சொல்லி பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆளுநர் ரவியின் உரையின் தமிழகத்தைச் சட்டசபை தலைவர் அப்பாவு வாசித்தார். அப்போது அதிமுக, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவையில் இருந்தும் வெளியேறினர். தொடர்ந்து நடந்த சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் அவையை 24ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 2வது நாளாக நேற்று சட்டசபை கூடியது. காலை 9.30 மணிக்கு அவை கூடிய நிலையில், முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்​கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, அவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.. பிரபல தொழில​திபர் அருணாசலம் வெள்​ளை​யன், கவிஞர் ஈரோடு தமி​ழன்​பன், தயா​ரிப்பாளர் ஏ.வி.எம்​. சர​வணன், மக்​களவை முன்​னாள் தலை​வர் சிவ​ராஜ் பாட்​டீல், எம்​.எல்​.ஏ. பொன்​னு​சாமி ஆகி​யோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இன்று 3வது நாளாக அவை கூடியது.. காலை உறுப்பினர்கள் கேள்விக்குத் துறை ரீதியான அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள். தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதமும் இன்று தொடங்குகிறது.

இதற்கிடையே சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். கறிக்கோழி பிரச்சினை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டுள்ளனர். நேரமில்லா நேரத்தில் விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்கச் சில நிமிடங்கள் அனுமதி கொடுப்பதில் என்ன பிரச்சினை என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒரு கட்சி மட்டும் அளித்திருந்தால் அனுமதி அளித்திருப்பேன்.. மொத்தம் 15 பேர் கொடுத்துள்ளனர்... அனைவருக்கும் அனுமதி தர வேண்டியுள்ளது என்றார். இருப்பினும், சபாநாயகர் பதிலை ஏற்காத அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து எழுந்த முதல்வர் ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான பதில் தயாராகி வருவதாக குறிப்பிட்டார். மேலும், பதில் தயாரானதும் நாளை அது குறித்து விவாதிக்கலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இருப்பினும், இதை ஏற்க மறுத்த அதிமுக எமஎல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+