அண்ணாமலையை மூன்றாம் தர பேச்சாளர்கள் போல அநாகரீகமாக பேசுவதா? அதே பாணி பதிலடிதான்-கருப்பு முருகானந்தம்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக தலைவர்கள் 3-ம் தர மேடை பேச்சாளர்கள் போல அநாகரீகமாக பேசுவதற்கு தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையை மிக கடுமையாக விமர்சித்தார். அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகமும், வசூல் யாத்திரை நடத்தும் அண்ணாமலை என வெளுத்தெடுத்தார்.

இதற்கு அண்ணாமலையும் பதிலடி கொடுத்தார். சிவி சண்முகத்தின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களை மறைமுகமாக சுட்டிக் காட்டியும் விமர்சித்தார் அண்ணாமலை. இதனைத் தொடர்ந்து அண்ணா திமுக கூட்டணியில் பாஜகவுக்கு இடம் இல்லை என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அ.தி.மு.கவை சார்ந்த திரு.ஜெயக்குமார்,திரு.C.V. சண்முகம் மற்றும் திரு.செல்லூர் கே.ராஜூ போன்றவர்கள் தொடர்ந்து அண்ணாமலையை பொதுவெளியில் அவமரியாதையாக பேசிவருவது வன்மையாக கண்டிக்கதக்கது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் அரசியல் முதிர்ச்சி இன்றி,மூன்றாம் தர மேடை பேச்சாளர்கள் போல அநாகரீகமாக பேசுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
அ.தி.மு.கவை சார்ந்த திரு.ஜெயக்குமார்,திரு.C.V. சண்முகம் மற்றும் திரு.செல்லூர் கே.ராஜூ போன்றவர்கள் தொடர்ந்து நமது @BJP4TamilNadu தலைவர் திரு @annamalai_k Ex-IPS அவர்களை பொதுவெளியில் அவமரியாதையாக பேசிவருவது வன்மையாக கண்டிக்கதக்கது.
— Karuppu Muruganandham (@KaruppuMBJP) September 19, 2023
மக்காளல் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள்…
தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.கவினர் கொண்ட கொள்கையில் ஒரு போதும் சமரசம் செய்திட மாட்டோம்.மக்களின் நலனுக்காகவே பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியே தவிர 2024 பாராளுமன்ற மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அல்ல, வரும் காலங்களிலும் மத்தியில் அ.தி.மு.க கூட்டணி இன்றி பா.ஜ.க தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்கிற அறியாமையின்றி பேசுகிறார்கள்.
மாநில தலைவ அண்ணாமலையை அ.தி.மு.கவினர் தொடர்ந்து இழிவாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் அவர்களது பாணியில் தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு கருப்பு முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications