மீண்டும் வந்த கேடி ராகவன்.. அண்ணாமலை எதிர்ப்பு அணிக்கு.. தமிழக பாஜகவில் கூடிய பவர்.. நயினார் கேம்!
சென்னை: தமிழக பாஜகவில் மீண்டும் கே டி ராகவனுக்கு பதவி கிடைத்துள்ளது. 3 வருடங்களுக்கு முன் பாலியல் வீடியோ கால் புகாரின் பெயரில் இவரின் பதவி பறிக்கப்பட்டது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது கட்ட நிர்வாகிகள் பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நியமனங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஒப்புதல் அளித்ததாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவராகப் பதவி வகிக்கும் நயினார் நாகேந்திரன், கட்சி ரீதியாக சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளார். பொதுவாக, புதிய தலைவர்கள் தங்கள் நிர்வாக வசதிக்கேற்ப கட்சி நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். அந்த வகையில், நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களுக்கு செக்
குறிப்பாக, அண்ணாமலைக்காக பணியாற்றிய மற்றும் கட்சியில் மற்ற தலைவர்களை மதிக்காத சில நிர்வாகிகளை நீக்க நயினார் திட்டமிட்டுள்ளார். மேலும், சாதி ரீதியாக அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் பதவிகளை வழங்கவும் அவர் முடிவு செய்துள்ளார். அதேபோல், முந்தைய தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்களையும் மாற்ற அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் ரவுடிகள் சிலர் கட்சியில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி, அவர்களை நீக்கவும் நயினார் திட்டமிட்டுள்ளார். பாஜகவின் நீண்ட கால திட்டமான பூத் கமிட்டி அமைக்கும் பணி, அண்ணாமலை காலத்தில் முழுமையாக நடைபெறவில்லை. எனவே, 2026 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார். இதற்காக, கட்சியின் நிர்வாகிகள் குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் குழு விரைவில் மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாஜக நிர்வாகிகள் நியமனம்
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது கட்ட நிர்வாகிகள் பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நியமனங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஒப்புதல் அளித்ததாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதில் நடிகை குஷ்பு மாநில துணைத் தலைவராகவும், சூர்யா இளைஞரணி தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் எஸ்.ஆர். சேகர் மாநில பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கே.டி. ராகவன் மாநில பிரிவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.டி. ராகவன் மாநில பிரிவு
இதன் மூலம் தமிழக பாஜகவில் மீண்டும் கே டி ராகவனுக்கு பதவி கிடைத்துள்ளது. 3 வருடங்களுக்கு முன் பாலியல் வீடியோ கால் புகாரின் பெயரில் இவரின் பதவி பறிக்கப்பட்டது. அண்ணாமலை இருந்தவரை இவர் ஓரம்கட்டப்பட்டு இருந்தார். அவருக்கு பதவி எதுவும் கிடைக்கவில்லை. அண்ணாமலைக்கும் இவருக்கும் மோதல் என்றும் கூட கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் அண்ணாமலை ஓரம்கட்டப்பட்ட நிலையில், கே டி ராகவனுக்கு பதவி கிடைத்துள்ளது.
அதேபோல் அண்ணாமலைக்கு போட்டியாக கருதப்பட்ட வினோஜ். பி. செல்வம் வகித்து வந்த மாநில செயலாளர் பதவியில் மீண்டும் தொடர்ந்து பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அண்ணாமலைக்கு எதிராக இருந்த பல நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணாமலை இருந்த காலத்தில் குஷ்புவும் கூட மாநில பதவிகளில் பெரிதாக பொறுப்புகளை பெறாமல் ஒதுக்கி வைக்கப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் நயினார் இவர்களுக்கு தேடி தேடி பதவி கொடுத்துள்ளார்.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!











Click it and Unblock the Notifications