ரிசல்ட்டுக்கு முன்பே.. களைகட்டும் தமிழ்நாடு பாஜக.. போனை போட்டு வரச்சொன்ன அண்ணாமலை.. நாளையே திக்திக்
சென்னை: நாளை தமிழக பாஜக சார்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு அதன் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சி 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

தேர்தல் இறுதிக்கட்டம்: நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.
கடந்த வாரம் 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. நேற்று 6ம் கட்ட தேர்தல் நடந்தது. ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நேற்று 6 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் தேர்தலை சந்தித்த 58 தொகுதிகளில் தோராயமாக 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இனி கடைசியாக 7ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன.
கூட்டம் அழைப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் நாளை தமிழக பாஜக சார்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு அதன் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பின் நடைபெற உள்ள, முதல் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஆகும் இது.
நாளை பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்று இதில் ஆலோசனை செய்யப்படலாம். கட்சியில் நிர்வாகிகள் இடையே
கருத்து வேறுபாடுகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் அது களையப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் புதிய நிர்வாகிகள் நியமனம், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications