சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்வி முதல் விவசாயம் வரை.. செம அறிவிப்புகள், திட்டங்கள்..இதுதான் அதிமுக அரசின் 2020-21 தமிழக பட்ஜெட்

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu Budget 2020 | கல்வி முதல் விவசாயம் வரை அதிமுக அரசின் 2020-21 தமிழக பட்ஜெட்

    சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 இன்று காலை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    மத்திய அரசின் பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருமான வரி தொடர்பான முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்கியது.

    நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் பல்வேறு காரணங்களுக்காக அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    பெரிய அளவில் முன்னேறும்.. 2 வருடங்களில் பல மாற்றம் வரும்.. சென்னைக்கு அள்ளிக்கொடுத்த பட்ஜெட்! பெரிய அளவில் முன்னேறும்.. 2 வருடங்களில் பல மாற்றம் வரும்.. சென்னைக்கு அள்ளிக்கொடுத்த பட்ஜெட்!

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    தமிழக அரசு கடந்த வாரம்தான் டெல்டா மாவட்டங்களில் வேளாண் சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது.அதேபோல் 5,8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தும் அறிவித்தது. தற்போது அடுத்த முக்கியமான அதிரடி அறிவிப்புகள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் அதிக முக்கியத்துவம் பெற்றது..

    எவ்வளவு

    எவ்வளவு

    கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இந்த பட்ஜெட்டில் பின் வரும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தை விரிவு படுத்த 400 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருத்திய நெல் சாகுபடி விரிவுபடுத்தப்படும். 11.1 லட்சம் ஏக்கருக்கு நெல் விதைப்பு டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும். நெல், சிறுதானியம், கரும்பு சாகுபடி உயர திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    பேருந்து சிசிடிவி

    பேருந்து சிசிடிவி

    அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும். தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ64,208.55 கோடி ஒதுக்கீடு; ஓய்வூதியத்துக்கு ரூ33,009.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்

    நெல்

    இதற்கான மானியங்கள் அளிக்கப்படும். திருத்திய நெல் சாகுபடி 27.18 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படும். மின்சார துறைக்கு 20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கல்வித் துறைக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஐடி துறை

    ஐடி துறை

    தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

    வேளாண் துறை

    வேளாண் துறை

    வேளாண் துறைக்கு 11894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்வளத்துறைக்கு ரூ.1129.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாணவர்கள் நலன்

    மாணவர்கள் நலன்

    சமூக நலன் மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.5,935 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறைக்கு ரூ. 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை துறைக்கு ரூ.392 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உயர்தர பரிசோதனை கூடங்கள் அமைக்க ரூ.520 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ் வளர்ச்சி

    தமிழ் வளர்ச்சி

    தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.காவல்துறைக்கு 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக 18,540 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளிகள் எப்படி

    பள்ளிகள் எப்படி

    பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் பழுதுபார்த்தல் & மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதியுதவி ரூ.5 கோடியாக அதிகரிப்பு. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வேறு திட்டம்

    வேறு திட்டம்

    ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.3,041 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறித்துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளி சீருடை, பாடப்புத்தகங்கள், காலணி வழங்க ரூ.1,018 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வரும் நிதியாண்டில் 1,12,876 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்.

    சென்னை கவனம்

    சென்னை கவனம்

    சென்னை - குமரி தொழில் மண்டல வழித்தட திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 52 கிமீ தூர மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கப்படும். வரும் நிதியாண்டில் ரூ.59,209 கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டம்.

    தீயணைப்பு துறை

    தீயணைப்பு துறை

    இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு திட்டத்திற்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    English summary
    Tamilnadu Budget 2020: Finance Minister O Paneerselvam to announce the schemes today morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X