TN Budget 2022: 21 மொழிகளில் பெரியார் சிந்தனை தொகுப்பு.. பட்ஜெட் உரையில் அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு
சென்னை: பெரியாரின் சிந்தனை தொகுப்பு 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்நூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது.

பட்ஜெட் 2022
இதனால் பட்ஜெட் மீது மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று காலை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், திருக்குறள் உடன் அவையைத் தொடக்கி வைத்தார் சபாநாயகர் அப்பாவு. அப்போது பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதியமைச்சர் பிடிஆர். அப்போது ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டு தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமைச்சர் பிடிஆர் தனது உரையைச் சற்று நேரம் நிறுத்தினார்.

உலக மொழிகளில் பெரியார் சிந்தனை தொகுப்பு
அதிமுகவினர் வெளிநடப்பு செய்த பின்னர், பிடிஆர் தனது பட்ஜெட் உரையைத் தொடர்ந்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில், அவர் பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். பெரியார் சிந்தனைகளை மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாகவே இருந்து வரும் நிலையில், பெரியாரின் சிந்தனை தொகுப்பு 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்நூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்று அமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.

பெரியார் சிந்தனை தொகுப்பு
பெரியார் சிந்தனைகள் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் சட்டசபையில், " தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலை நிறுத்திடவும் பகுத்தறிவைப் பரப்பிடவும், பெண் அடிமைத்தனத்தை ஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும் வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். அவரது சிந்தனைகளும், எழுத்துக்களும் காலத்தை வென்று இன்றும் ஒளிர்கின்றன. தனித்துவம் மிக்க அவரது முற்போக்கு சிந்தனையால் அனைவரையும் பயனடையச் செய்வது இந்த அரசின் கடமையாகும்

21 மொழிகள்
இதனை நிறைவேற்றும் விதமாக உரிய அறிஞர் குழுவின் பரிந்துரைகளின்படி பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். இப்பணிகள் 5 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்" என்று அவர் அறிவித்தார். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொத்தம் 21 மொழிகளில் பெரியார் சிந்தனை தொகுப்பு மொழியாக்கம் செய்யப்பட உள்ளது.

பெரியார் நினைவு சமத்துவபுரம்
அதேபோல கடந்த திமுக ஆட்சியில் சமத்துவபுரங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை பராமரிப்பின்றி இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில் இது குறித்து அமைச்சர் பிடிஆர் தனது பட்ஜெட் உரையில், "சமத்துவம் தழைக்கும் நோக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும். கடந்த 10 ஆண்டு காலகமாகப் பராமரிப்பின்றி இருக்கும் 149 சமத்துவபுரங்கள் ரூ. 190 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்" என்று அறிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications