"பல்வேறு விளையாட்டுக்களுக்குப் புகழ்பெற்ற வடசென்னையில்.." அமைச்சர் பிடிஆரின் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்து வரும் நிலையில், விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் குறித்து அமைச்சர் பிடிஆர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது.

வெளிநடப்பு
இன்று காலை நிதியமைச்சர் பிடிஆர் தனது பட்ஜெட் உரையைத் தொடங்கிய போது, ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டு தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமைச்சர் பிடிஆர் தனது உரையைச் சற்று நேரம் நிறுத்தினார். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த பின்னர், பிடிஆர் தனது பட்ஜெட் உரையைத் தொடர்ந்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில், அவர் பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஒலிம்பிக் திட்டம்
விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் குறித்து அமைச்சர் பிடிஆர், "ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்குவதில் வெற்றி கண்ட ஒலிம்பிக் தங்கப் பதக்கக் குழு போலவே தமிழ்நாட்டிலிருந்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்கத் தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்தைச் செயல்படுத்த 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

வடசென்னை
பல்வேறு விளையாட்டுக்களுக்குப் புகழ்பெற்ற வட சென்னையில் இளைஞர்கள் திறனை ஊக்குவிக்கவும் நோக்கத்துடன் சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்றை அரசு உருவாக்கும். கைப்பந்து, பூ பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபடி மற்றும் நவீன உடற்பயிற்சி கூடத்தில் சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் முதற்கட்டமாக ரூபாய் 10 கோடி செலவில் வளாகம் அமைக்கப்படும்.

ஒலிம்பியாட் 2022
உலக அளவில் செஸ் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்ற போட்டி செஸ் ஒலிம்பியாட். பொதுவாக இந்தப் போட்டியை நடத்துவதற்குச் சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் போட்டி நடக்கும். இதுவரை இந்திய போட்டிகளை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு இந்த அரசின் சீரிய முயற்சிகளின் பலனாக முதல் முறையாக ஒலிம்பியாட் 2022 சென்னையில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.150 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

திருப்பமுனை
தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் இது ஒரு திருப்புமுனையாக அமையும். இந்த போட்டிகளைச் சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் இந்த அரசு வழங்கும். இந்த மதிப்பீடுகளில் விண்வெளியில் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் 293 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் அறிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications