மீண்டும் "வாய்ஸ்" தந்த சீனியர்கள்.. "முடிவு பண்ணுவாங்க".. கூலாக சொன்ன உதயநிதி! ஸ்டாலின் பிளான் என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் எழ தொடங்கி உள்ளன. அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது தொடர்பான குரல்கள் வர தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று ஒன்றரை வருடங்கள் ஆக போகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பேச்சுக்கள் எழுந்தன.
அதை தொடர்ந்து உதயநிதிக்கு சில குறிப்பிட்ட துறைகள் வழங்கப்படலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் இதில் எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
அரசை விமர்சித்த எழுத்தாளருக்கும் 1.5 கோடி வீடு - பெருந்தன்மை காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

அமைச்சரவை
கடந்த 3 மாதமாக இந்த பேச்சுக்கள் தீவிரம் அடைந்தன. முக்கியமாக மூத்த - செயல்படாத அமைச்சர்கள் சிலரின் (2 பேரின்) பதவி பறிக்கப்படலாம் என்று செய்திகள் வேகமாக பரவின. இதற்காக அமைச்சர்கள் பற்றிய ரிப்போர்ட்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டதாகவும் தகவல்கள் வந்தன. இது போக சிலருக்கு இலாக்கா மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதாவது சில அமைச்சர்களிடம் இருக்கும் இலாக்கா குறைக்கப்பட்டு அதில் புதிய அமைச்சர்கள் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இளம் எம்எல்ஏக்களான டிஆர்பி ராஜா போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

முடிவு
ஆனால் இதில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் இருந்தது. அப்போதே அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கினார்கள். ஆனால் அப்போது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எனோ அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரமாக மீண்டும் அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சுக்கள் எழ தொடங்கி உள்ளன. குறிப்பாக நேற்று உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை கொண்டாடினார்.

அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று அளித்த பேட்டியில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக வேண்டும் என்று குறிப்பிட்டார். அமைச்சர்கள் கே. என் நேரு, மா சுப்பிரமணியன் ஆகியோரும் இதை விருப்பத்தை தெரிவித்து உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக சிறப்பாக செயல்படுகிறார். அவர் அமைச்சராக வேண்டும். அமைச்சரவையில் இருந்தால் அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார். அவர் மக்களை ஈர்க்க கூடிய தலைவராக இருக்கிறார் என்று வாழ்த்து தெரிவித்து உள்ளனர். திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் பலர் இதே விருப்பத்தை தெரிவித்து உள்ளனர்.

உதயநிதி
இதற்கு பதில் அளித்த உதயநிதி, மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன். நான் அமைச்சராக போவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஒன்றரை வருடமாகவே இந்த பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் முதல்வர்தான் அதை பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூலாக சொல்லி இருக்கிறார். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் பிளான் என்ன, அவர் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக சீனியர்களிடம் அவர் பேசும் போது, அமைச்சரவையை மாற்றியமைக்கலாமா என்கிற விசயங்கள் அவரது பேச்சில் பட்டும் படமால் அடிபடுகிறது.

சீனியர்
குறிப்பாக, சீனியர், ஜூனியர் உட்பட 6 அமைச்சர்கள் மீது வருத்தமாக பேசியிருக்கிறார். சில மூத்த அமைச்சர்கள் பற்றியும் ஸ்டாலின் இதில் பேசி இருக்கிறாராம்.முக்கியமாக தற்போது அமைச்சராக இல்லாமல் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு மூத்த எம்எல்ஏவை அமைச்சரக்காலமா என்றும் அவர் யோசிக்கிறாராம். அமைச்சர் ஒருவரை, அந்த முக்கிய பொறுப்பில் அமர வைக்கலாம் என்று அவர் திட்டமிட்டு உள்ளாராம். இதனால் சில மாற்றங்கள் விரைவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.