தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு.. மகளிர் ரூ.1000 திட்டத்துக்கு விண்ணப்பிக்க 36000 முகாம்
சென்னை: அரசியல் உள்ளிட்ட விவகாரங்களினால், மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது தமிழ்நாடு.. இப்படிப்பட்ட சூழலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது... இதற்கான டோக்கன், விண்ணப்பம் வழங்கும் பணிகளும் ஆரம்பமாகிவிட்டன.
வரும் செப்டம்பர் 15-ந் தேதி இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதால், டோக்கன் கொடுக்கும் பணிகள், வங்கி கணக்கு, உள்ளிட்ட பணிகள் துரிதமாகி உள்ளன.. இந்த மகளிர் உரிமைத்தொகை குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை முதல்வர் தொடர்ந்து அதிகாரிகளுடன் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் கூட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.
கலைஞர் உரிமைத்தொகை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.. எனவே, தமிழகத்திற்கு வரவுள்ள புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கம் ஆகியவற்றுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ஆளுநர் ரவியை மாற்றுமாறு குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.. ஆளுநரை மாற்றுவது தொடர்பாக திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் நாடாளுமன்றத்திலும் பேச உள்ளதாக தெரிகிறது.. எனவே, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
செந்தில்பாலாஜி: அதேபோல, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளார்.. இலாகா இல்லாத அமைச்சராகவும் உள்ளார். அதேபோல, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனைகள் மேற்கொண்டிருந்தனர்.. அத்துடன் அவர்கள் வீட்டில் இந்திய, வெளிநாட்டு பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பொன்முடி: அதனால், அமைச்சர் பொன்முடியையும், அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யையும் அமலாக்கத் துறையினர் விசாரித்து முடித்துள்ள நிலையில், அவர்களும் கைது செய்யப்படுவார்களோ? என்ற சந்தேகம் தமிழக அரசுக்கு எழுந்து வருகிறது.. இவர்களை தவிர, மேலும் சில அமைச்சர்களும் அமலாக்கத் துறையின் சோதனை வட்டத்தில் சிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறையின் பிடி இறுகி வருகிறது.
இப்படி ஒரு பரபரப்பில் தமிழகம் பீடித்துள்ள நிலையில், இன்றைய தினம் அமைச்சரவை கூட்டம் கூடிய.. இதில் பங்கேற்கும்படி அமைச்சர்கள் அனைவருக்கும் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரும் பங்கேற்றுள்ளனர். செந்தில் பாலாஜியை தவிர அனைத்து அமைச்சர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
விசாரணை அமைப்புகள்: விசாரணை அமைப்புகளை ஏவி, எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக தமிழக சட்டசபையை உடனே கூட்டி, மத்திய அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் ஏற்கனவே கோரிக்கையும் விடுத்திருந்தது.. அநேகமாக இந்த கோரிக்கை பற்றியும் அமைச்சரவையில் இன்றைய தினம் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை உள்பட பல முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முகாம்கள்: குறிப்பாக ஒரகடத்தில் அமைய இருக்கும் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுப்பது பற்றி பேசப்பட்டது. மேலும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போதைய நிலை தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, மணிப்பூர் விவகாரம், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications